70 குறுகிய மனப்பான்மை யென்று குறைகூறு வதைக் கண்டு ஆயாசப்படக்கூடாது! வகுப்புத் துவேஷிகள் என்ற தூற்றுதலைக் கண்டு மிரளக்கூடாது. வறுமை-வளமற்ற வாழ்வுச் வாழ்வுச் சுமை-வேலையில் லாத் திண்டாட்டம் இத்தனைக்குமிடையே அவல வாழ்வு வாழும் நாம் நம்முடைய ஓய்வு நேரத்தைக்கூட வீணாக் கக்கூடாது. முழு நேரமும் உழைப்போர், உழைக்க விரும்பும். வசதியும் படைத்தோர் உழைக்கட்டும், உழைப்பர். மற்றவர், எங்கெங்கே இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்வு-வரண்ட வாழ்வு வாழ்ந்தாலும் நாட்டின் எதிர் காலத்திலே ஏற்றத்திலே அக்கரை கொண்டு, தமது ஓய்வு நேரத்தை யேனும் இயக்கப் பணியில்-பிரச்சா ரத்தில், ஆக்க வேலைகளில் ஈடுபட்டு, நடமாடுங் கல்லூரி களாய் நாட்டிலே நடமாட வேண்டுகிறேன். "நம்முடைய வாழ்வே நன்றாக இல்லை, இதிலே நாட்டுக்கு என்ன உழைப்பது,” என்ற சலிப்போ சஞ்ச லமோ கூடாது! நாடு முன்னேறினால், நாட்டார் நலம் பெறுவர், நாட்டவரிலே நாமும் சேர்ந்தவர்களே என்ற பரந்த மனப்பான்மை கொண்டு பகுத்தறிவுப் பணிபுரிய, வட வரின் அரசியல், பொருளாதாரப்பிடியினின்றும் விடு பட்டு, இனஅரசு காண அறிவுப்படையில் அணிவகுத்து நில்லுங்கள்! நில்லுங்கள் !
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/70
Appearance