உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-X 5 டுள்ள உயிர் நாயை ஒத்துள்ள நாய் என்று கருதுவே கருதக் காரணமாவதே, கலை என்பதை நினைவூட்டுகிறேன். ஆனால் நாயென்பதற்காக, கல்லல்ல என்று கூறுவது உள் ளதை மறைப்பது, உண்மையை மாற்றுவது.கல்லென்பது மறைக்கப்பட்டால் கல், கல்லில் செய்யப்பட்ட வேலை, அவ்வேலையால் வாழும் மனிதன் ஆகியவர்கள் மறைக்கப்படு கிறார்கள். வாழ்வின் உண்மை மறைந்து விடுகிறது. எண் சாண் உடம்பில் ஒரு சாண் வளர்க்கவோ, அன்றி மனத் தைத் திருப்திப்படுத்தவோ இப்படி "ஒருவன் கல்லைக் கலை யாக்கினான், அதுவே அவன் வாழ்க்கை, என்ற உண்மை, மறைய நேரிடுமானால், அது உலகியலை மறைப்பதாகும். சிலை நாயை உயிர் நாயாக்குவது இயலாதது போலத்தான், கலைக் கற்பனையை வாழ்க்கை உண்மையாக ஆக்குவதும் இயலா து என்றும், கலையை உணர்வதற்காக, வாழ்க்கையை மறந்து விடுவது இயலாது என்றும், வாழ்க்கையை உணர்த்தாத எந் தக் கலையும் உண்மைக் கலை, போற்றத் தக்க கலையாகாது என்றும் கூற விரும்புகிறேன்.கலை நோக்கம் உலகியலை உண ரத் தடையாகுமானால், அதுவே வாழ்க்கைக் கொலையாகும். அக்கலை நமக்குத் தேவையுமில்லை. கொலைக்குப் பெயர் கலையு மல்ல. மானை ஒரு பெரிய காடு. ஒரு புறத்திலே வேடனொருவன் ஒரு கலையைத் துரத்துகின்றான். கலையென்றால் யும் குறித்திடும் என்பதை அறிவீர்கள். வள்ளி தினைப் புனங் காத்தபோது வந்த வேடன் துரத்திய பொய் மானு மல்ல இங்கே துரத்தப்பட்டது. உண்மையிலேயே மானி றைச்சியே அவ்வேடனுக்கு உணவு. அன்று காலை அவன் கண்ணிலே சிக்கியது அந்தக் கலை. கலையை நோக்கியெய்த குறிதவறியது. இந்நிலையிலே, வேடனுக்குப் பக்கத் திலே ஒரு முனிவர் வேடனைப் பார்த்தார். அவருக்கு கலை யைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். கொல்லாதே! புல்வாய்! வேண்டாம் என்றார். இவை வேடன் காதிலே ஏற வில்லை. ஆனால் வேடன் விடுத்த அடுத்த கணை குறிதவற வில்லை. கணை பாய்ந்த கலை, கால் சுருண்டு விழுந்துவிட்டது.