உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வழைக்கும் கலையுருவமாயிற்று. இந்தச் சிற்பத்திறனை உணர, கலையைப்பேச இந்த கடவுளுந் தேவையில்லை, நாயே போது மானது. கல்லைச் செதுக்கி, கண்ணுங் காதுமமைத்துச் செய்துவிட்டால் கல் கடவுளாவதைப் போலத்தான் நாயு மாகிறது. இங்கே கல்லிலே நாயின் உருவத்தைக் காணுகின் றோம். பொம்மை நாய் என்றோ, கல் நாயென்றோ கூறு கிறோம்.எனினும், சிற்பநாயை மட்டும், சிலை என்ற எண்ண மில்லாமல் பார்க்கநேரும்போது, அது நாயாகவே, உயி ருள்ள நாயைப் போன்றே தோன்றுகிறது. 'அந்த எண் ணம்' தோன்றிய உடனேயே மறையவும் நேரிடுகிறது. உயிர் நாய் என்று எண்ணிய மறுகணமே இது கல் நாயல்லவா என்ற எண்ணம் பிறக்கத்தான் செய்கிறது. கல்லல்லவா நாய் உருவத்தில் இருப்பது என்ற எண்ணம், தோன்றாமல் இருக்கமுடியாது, அவ்வாறு தோன்றுவது தவறுமல்ல. ஆனால், அதை "நாயாகவேதான் காணவேண்டும் ; நாயாகக் காண்பவரே கலையுணர்வுடையார்" என்பவர்கள் நாளடைவில் தோல்வியைத்தான் கண்டார்கள். கண்டும் வருகிறார்கள் என் பது கண்கூடு. நாயென்றே எண்ணிவிட, நம்பிவிட நாம் குழந்தைகளுமல்ல, குழந்தைகளுங்கூட சில வினாடிகளுக் குப் பின்னால் நம்பவும் மறுப்பார்கள் நாயைக் கண்டிருந் தால்! கல்லை நாயென்றே எண்ணுவதாக வைத்துக் கொண் டாலுங்கூட, அவ்வாறு எண்ணுகின்ற கலைஞர்கள் கூட, தங் கள் வீட்டுக்காவலுக்கு அதைக் கட்டவிழ்த்துவிடக் கருது வதுமில்லை. இப்படிக் கருதும் கலைஞர்கள் உணருகின்ற உள்ளக் கிடக்கைக்குப் பதிலாகக், கற்பனை யையே உண்மையென்று நம்பவும் கருதவும் பயிற்சி பெற்று வருகிறார்கள். உ ண்மையை நாய் கல்லால் செய்தது என்பது உண்மை. : அதன் புறத்தோற்ற அளவிலே தான் அது நாய் ; அதிலுங்கூட, ஆடாத, அசையாத வாலாட்டாத குலைக்கா த த குலைக்காத - புறத் தோற்றத்தையுடைய நாய். அதன் தோற்றமே உடல் முழு வதுமே கல், கல்லிலே வேலைப்பாடு, வர்ணம். கல்லில் தோன்றும் சிலை நாயை அழகிய சிறந்த வேலைப்பா -