3 கலையிலேயே பிறவற்றை மறந்து மூழ்கிவிட்டால்தான் என்ன? என்று கேட்பாரும் உண்டு. அகிற்கட்டையால் அடுக்கப்பட்ட சிதையிலே இடம் பெற்றுவிட்டாலும்,தாம ரைத் தடாகத்திலே மூழ்கித் திரும்பிவரா விட்டாலும், அத னால் உலகத்திற்கு ஏற்படும் விளைவு தான், இதனாலும் என்று கூற விரும்புகின்றேன். அப்படிக் கலையில் மூழகிய வரால், உலகத்திற்கும் (வாழ்க்கைக்கும்) பயனில்லை, தனக் கும் பயனில்லை என்பதை உணர வேண்டும். கலையின் நோக்க மும் நிறைவேறாது போய்விடும். "நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண் டால் நாயைக் காணோம்" என்ற பழமொழியைக் கேட்டிருப் பீர்கள். நம் நாட்டுச் சிறுவர்களுக்கு, நாயைக் கண்ட பின் கல்லைத் தேடிக் காணாத சமயத்திலெல்லாம் இந்தப் பழ மொழி நினைவிற்கு வருவதுண்டு. அவர்களுக்குத் தோன்று வது அந்தக் கருத்து. நம்முடைய கற்சாமிகளைக் காப்பாற் றும் கனபாடிகள், இதற்கு ஓர் தத்துவப் பொருள் உரைப் பார்கள். கோவிலிலே சென்று காணுகின்ற கற்கடவுளை, கடவுளென்று நினைக்குங்காலை கல் மறைந்துவிடுகிறது, கல் லென்று எண்ணுங்காலை கடவுள் மறைந்து விடுகிறது, ஆகவே, கல்லென்று எண்ணிப் பாராதே, கடவுளென்றே கருது என்பார்கள். ஆனால், கருதுவது எதுவானாலும் இருப்பது ஒன்றே. கடவுளென்றே கருதுகின்ற நேரத்தி லும் காண்பது கல்லைத்தான் என்பது யாரும் மறுக்கமுடி யாததாகும். நீலக்கண்ணாடி போட்டுக்கொண்டு, கொடும் வெய்யிலிலே குளிமையைத் தேடிக் கொள்வதைப் போன் றது தான், கடவுளென்ற கருத்துக் கண்ணாடி போட்டுக் கொண்டு, கல்லைக்கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வது மாகும். இது முறையா அல்லவா என்பதல்ல நான் சொல்ல வந்தது. இது உண்மையா, அன்றா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டு மென்பது தான். கல் ஆனால் சிற்பியால், சிற்பியின் உளியால், சிற்பத்திறனால் கடவுளுருவமாயிற்று. கடவுளென்ற கருத்தை வர
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/9
Appearance