17 காச புராணங்களும் எடுத்துக் காட்டாய் உள்ளன. காவிரி பாயும் தென்னாட்டுத் திராவிடர் வளர்த்தகலைக்கும், கங்கை பரயும் வடநாட்டு ஆரியர்வளர்த்த கலைக்கும் வேற்றுமை இருக் கின்றது. கீழ் நாட்டுக் கலைக்கும் மேல் நாட்டுக் கலைக்கும் உள்ள வேற்றுமையைவிட, தென்னாட்டுக் கலைக்கும் வட நாட் டுக் கலைக்கும் உள்ள வேற்றுமை குறைவான தன்று. திரா விடக் கலையும் ஆரியக் கலையும் வேறுபாடு மட்டுமே யன்றி முரண்பாடும் கொண்டவை. ந்நிலையில் கலையைப் பிரித்துப் பேசுவதா எண்றெண் ணுவர் சிலர். ஆனால் கலைவளர்ச்சி அடைந்துள்ள இடங் களிலெல்லாம் அது பிரிந்ததையும் காணலாம்.ஓரிரு மொழி யும் ஒரே கலையுமாய் இருந்த ஐரோப்பா கலையை வளர்க்கத் தொடங்கியதாலேயே பல மொழிகளும் பன்னாட்டுக் கலைகளு மாய்ப் பிரிந்து இன்று மிகுந்த வளர்ச்சியுற்று இருப்பதைக் காணலாம். இலியடுக்கும் ஒடிசிக்குமே கலையென்ற மதிப் பிருந்த ஐரோப்பாவிலே இன்று நாட்டுக்கு நாடு தனித்தனி பண்பு மிக்க கலைகளும் கவிவாணர்களும் கவிதைகளும் காணப்படுவானேன்? ஆங்கில நாட்டில் சிறப்புடையவன் ஒரு கவி, பிராஞ்சு நாட்டிலே பிறிதொருவன், இத்தாலிய நாட்டிலே அந்நாட்டுச் சிறப்படைந்த கவிவாணன் வேறொரு வன். இது இது வளர்ச்சியல்லவா? இவ்வாறு அண்மையில் நிகழ்ந்த பிரிவிலும் கலைக்கு வளர்ச்சி இருக்குமானால் கலை உலகில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயும் இருந்த ஆரியர் சிந்து நதிக்கரையிலே தங்கி கங்கை யாற் றோரம் பரவிய காலத்திலும் தெளிவாகக் காணப்பட்ட பிரிவை பலப்பல நூற்றாண்டுகளாக மங்காது மறையாது இருந்துவருகின்ற ஒரு பிரிவை இன்றும் வாழ்க்கையின் துறைதோறும் காணப்படுகின்ற ஆரியர் - திராவிடர் பிரி வை என் பிளவை எடுத்துக் காட்டுவது தவறாகுமா என்று கேட்கின்றேன். பிரிவை - - - மேல் நாடுகளிலே விஞ்ஞானம் வளர்ச்சியுற்றது. அந்த மேலான அறிவின் விளைவால் பற்பல முற்போக்குகள் ஏற் 2
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/23
Appearance