உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 3593 னிடத்தில் சென்று, அவன் கற்ற முறையைக் கேட்டார். அவன் பக்தியோடு உண்மையைக் கூறினான். துரோணாச் சாரியாருக்கு அது பொறுக்கவில்லை. ஆகவே அவனிடத் திலே குருவுக்குத் தரவேண்டிய காணிக்கையைக் கேட் டார். எதை நான் அளிக்கட்டும் என்று வேடன் வினவ, குரு கட்டை விரலைக் கேட்டார். கேட்டபடி பெற்றுத் திருப்தியடைந்தார். ஆனால் - ஏகலைவன் கட்டை விரலை மட்டுமன்றிக் கலையையும் இழந்தான். கலைக்காக, கருத் திழந்த வேடன், கட்டைவிரலை இழந்து வாழ்க்கையினையும் இழந்தான். துரோணாச்சாரியார், துரோகம், கலையுருவத் திலே -கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டது. ஏக லைவன் வாழ்வினைப் பாழாக்கியது. இந்தக் கதையிலே ஓர் அருமையான பாடம் இருக்கிறது. கலைக்கு அளிக்கவேண் டிய காணிக்கை வாழ்க்கையையே இழப்பது என்று இருக்கு மானால் அத்தகைய கலையினை இழப்பதே மேல் என்பதே அது. பக்த 'மீரா' படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், பார்க்காவிட்டாலும் கதையையாவது அறிந்திருப்பீர்கள். மீரா கண்ணன் சிலையைக் காணுகிறான் மகிழ்கிறான், சிலை யின் கவர்ச்சி, கலைப்பற்றாகி, கண்ணன் காதலாகி, கடவுள் பக்தியாக வளர்கிறது-மீரா விடத்தில். அத்தகைய மீராவை மணக்கிறான் ராணா. மீராவே கலையுருவந்தான். இசைக் குயில் தான். ஆனாலும் மீரா வாழ்க்கையிலே ராணாவுக்குத் துணையாக வில்லை இன்ப மளிக்கவில்லை. வாழ்க்கையிலே மன்னனாக விளங்கிய ராணா, மீராவின் பக்திக் கலையால் தன் வாழ்வினையே இழந்தான். அத்தகைய மீராவைப் போல கலையிருக்குமேயானால். அந்தக் கலையாருக்கும் தேவையில்லை. அதுமட்டுமல்ல. மீராபடம் - படக்கலையிலே சிறந்ததென்று மதிப்பிடுவோரும் உளர். அது உண் உண்மையானால் மக்கள் வாழ்க்கைக்கு அந்தப்படம் அளிக்கும் பயன் என்ன? பஜ னைப் பாடல்கள் சில பலவும், பிருந்தாவனத்துக்கு வழிகேட் கவும், சில மணிகளைக் கழிக்கவும் வேண்டுமானால் பயன்பட