உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி இந்த நாடகங்கள் தந்தை பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சியைப் பறைசாற்றிப் பரப்பியவை! 66 அந்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்தில் 'சிவாஜி' வேடம் ஏற்று நடித்த, வி.சி. கணேசனை தலைமை வகித்துப் பாராட்டிய தந்தை பெரியார் அவர்கள், "அவர் சிவாஜியாக மாறிவிட்டார்" என்று புகழ்ந்து, அவரது வாயால் "சிவாஜிகணேசன்" என்று வாழ்த்திப் பாராட்டினார். அதுவே கலை உலகத்தில் அவரது பெயராக நிலைபெற்று விட்டது. அதுபோலத், திராவிட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு, மிகப்பெரிய புரட்சியை திரைப்படத் துறையில் செய்து, மக்கள் திலகமாக - கொடுத்துச் சிவந்த கரத்திற்குச் சொந்தக்காரராக - திராவிட இயக்கத்தின் அரசியல் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை உருவாக்கியவராக - தந்தை பெரியார் தம் பண்பாட்டுப் புரட்சியை ஏற்று, திரைப்படத்தில் நடிக்கும்போது புராணப் பாத்திரங்களை ஏற்காது அமைதிப்புரட்சி செய்தவர் எம்.ஜி.ஆர்! C "நடிகவேள்” M.R. ராதா தந்தை பெரியாரின் பிரச்சாரப் போர்வாள், நாடுமுழுவதும் அவரது பண்பாட்டுப் புரட்சியினைத் தாங்கமுடியாமல், அவருக்கென்று நாடகத் தடைச் சட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்தது; அப்போது 144 தடைகள் போடப்பட்டன. அதைத் தாண்டி மக்களிடம் பிரச்சாரம் செய்தவர் - நடத்தியவர் ராதா! நகைச்சுவை அரசர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திலும், பெரியார் தம் பண்பாட்டுப் புரட்சிக் கருத்தினை நகைச்சுவைத் தேனில் குழைத்துக் கொடுத்தவர்! இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன், நடிகமணி டிவி. நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி முதலியோர் இதில் கொள்கைப் பிரச்சாரக் கோமான்கள்!