உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 37 தமிழ் இசைத் துறையில், எம்.எம். தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், மதுரை சோமு, இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் இப்படிப் பலர்! சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் இதனைச் செய்தவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பாவலர் பாலசுந்தரம், சி.பி. சிற்றரசு, ஏ.வி.பி. ஆசைத்தம்பி இப்படி கலைத்துறைச் செம்மல்கள். இராவண காவியப் புலவர் குழந்தை போன்றவர்கள் இலக்கியத் துறையில் மறுமலர்ச்சிக் காவியங்களைப் படைத்தனர். இதுபோல எத்தனை எத்தனையோ உண்டு. கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாம் என்கிற ஆணையே இங்கு வந்துவிட்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று போராடினார் தந்தை பெரியார். அதை தமது இறுதி போராட்டமாகக்கூட அறிவித்தார். தந்தை பெரியார் மறைவுக்குப்பிறகு தொடர்ந்து திராவிடர் கழகம் போராடி வந்திருக்கிறது. அண்மையில் உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பும் வழங்கிவிட்டது என்றால் இது தந்தை பெரியார் கொள்கைக்கு மகத்தான வெற்றிதானே!