உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விழாவில் புரட்சி! "தமிழர் விழா (பண்டிகை), என்பதாக, நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்றுவேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் (1929-ல்) நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம் இந்தப் பண்டிகையும் (Harvest Festival) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானே ஒழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல. பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம் மதக் கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தைமாதம் ஒன்றாம் தேதி என்பதாக தைமாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாராமாகக் கொண்டதாகும். இதற்கு எவ்விதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை, உலகில் எந்தப் பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்" என்றார் தந்தை பெரியார். பொங்கல் இயற்கையோடு இணைந்து வாழும் வேளாண் நாகரிகத்தின் உயர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக விழாவாகும்! உண்பதிலும், உடுப்பதிலும், அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் மதங்கள் புகுந்து மனிதனை 'மதம்' பிடித்தவனாக்கிய நிலையிலிருந்து அவனைக் காப்பாற்றிடும் விழாவாகப் பொங்கல் விழா அமைந்துள்ளது!