உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 45 அனுபவித்து வருகிறோம். இவற்றை யாராலும் மறுக்கமுடியாது. அப்படியிருக்க நம்முடைய கலைகள், நாம் அனுபவிக்கும் நுகரும் சாதனங்கள், இன்பத்தன்மைகள் ஆகியவை எப்படியிருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சாதாரணமாகப் பொருள் நட்டமோ, கால நட்டமோ, ஊக்க நட்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத்தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே, நம் நலத்துக்கு மாறான சேதிகளும் உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டுவிட்டதுடன், இவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செல்வழித்தும் நுகர்ந்து அறிவும், மானமும் கெட்டு, முற்போக்கும் தடையும் உற்றுக் கீழ் நிலைக்கு வரவேண்டியவர்களானோம். (தந்தை பெரியார், தமிழர், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு ) தமிழ் மக்களுக்குக் கலை வளர்ச்சியைப் பற்றிய கவலை பண்டிதர்களைத் தவிர மற்ற கலை உணர்ச்சியே இல்லாத பொது மக்களுக்கும், கலை என்றால் என்ன என்று அறிந்திராத செல்வச் சீமான்களுக்கும், கலை இன்னது என்றே உணர்ந்திராமல் கலையின் பேரால் வயிற்றுப்பாட்டுத் தொழில் நடத்தின தொழிலாளிகளுக்கும் இன்று திடீரென்று ஏற்பட்டு, கலை வளர்ப்பு முயற்சியில் இறங்கத் தோன்றின காரணம் என்ன என்பதை முதலில் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்ளுகிறோம், அதாவது இந்தியின் ஆதிக்கத்தை ஒழிக்க மக்கள் 'தமிழ், தமிழ்' என்று செய்த தமிழ்க் கிளர்ச்சியேயாகும். தமிழ் நாட்டில் ஆரியர் ஆதிக்கம் பெற்று எல்லாத் துறைகளையும் தம் வயப்படுத்திக் கொண்டு தங்கள் இன நலத்துக்கும் சுயநலத்துக்கும் ஏற்றவண்ணம் அவைகளைப் பெருக்கிக் கொண்டார்கள். மேலும், அவற்றின் மூலமே தமிழர் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வாழ்வதல்லாமல்