உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி சுட்டால் மார்பைக் காட்டுங்கள்! 67 12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம். ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆகவேண்டும். 13.இந்தி எதிர்ப்பு இயக்கம், காரியாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமை போல் கட்டுப்பட்டாக வேண்டும். 14. பெண்களிடமும், மற்றும் இயக்கத்தில் உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும், வெளியில் உள்ளவர்களிடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இன்னும் பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியம். "குடி அரசு" 7.8.1948) பெரியார் உருவாக்கிய பண்பாட்டுப் புரட்சிகளில் இதுவும் தனித்தன்மையானதே.