உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. தந்தை பெரியாரின் அணுகுமுறை தந்தை பெரியாரின் அணுகுமுறையானது நோய் நாடி அதன் முதல் நாடும் தன்மையானதாகும். மனித சமத்துவத்திற்கும், நேயத்திற்கும் தடையாக இருப்பது எதுவாயினும் அதனை அழித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, அதன்மேல் புத்துலகைப் படைப்பது என்கிற தீரத்தில் அமைந்தது அவரது பொதுத் தொண்டாகும். 1928 நவம்பரில் சென்னையில் சீர்திருத்தக்காரர்கள் மாநாடு நடைபெற்றது. தென்னிந்திய அம்மாநாட்டை செல்வி ஜோதிர்மாயி கங்குலி என்பவர் தொடங்கி வைத்தார். அந்த அம்மையார் பஞ்சாபில் இருந்த ஜாதி ஒழிப்பு சங்கத்தின் தலைவராவார். அம்மாநாட்டிலேயே சமபந்தி உணவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அம்மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை அவரின் அணுகுமுறையை அப்பழுக்கின்றி வெளிப்படுத்தக் கூடியதாகும். "ஒரு பெரிய கிணறு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கிணற்றிற்கு மிகப் பழமையானதும் விசேஷமானதுமான ஒரு புராணம் இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, அந்தத் கிணற்றுத் தண்ணீரில் ஒரு துளி தண்ணீரைச் சாப்பிடுவதனாலோ அல்லது மேலே தெளித்துக் கொள்வதனாலோ நம்முடைய எல்லாப் பாவமும் மகா பாதகமான காரியம் என்று சொல்லப்பட்ட செய்கைகளைச் செய்தாலும் மன்னிக்கப்படுவதுடன் மோட்சலோகம் என்பது கிடைக்கும் என்று எழுதியிருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு சிறிது. சாப்பிட்டால் விஷபேதி காணக் .