உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணவர், உலகத்தில் சர்வ விவேக அளவுகோல். கடவுள் தமக்கு அந்தத் தன்மையைப் பெறுவதற்கு எத்தனை மார்க் வாங்கினார் என்றுகூடக் கேட்கும் சர்வ சூன்ய மனத்தெம்பு படைத்தவர்கள், மாணவர்களும் அவர்கள் புத்தியை 'பாலிஷ்' செய்து தயாரிக்கும் அவர்களுடைய ஆசிரியர்களும். சர்வகலாசாலைகள் வித்வத்தின் விசேஷத்தன்மை பூண்டு, தன் திறமையால் பூத்து மலராமல், சப் மாஜிஸ்திரேட் கோர்ட்டின் எட்டாங்கிளைத் தாயாதியாக சிவப்பு நாடா வித்தையைச் செய்து வருவதால், மார்க்கை நம்பாத ஆசிரியர், பூசை செய்யும் விக்கிரகத்தின் தெய்வீகச் சக்தியை நம்பாத பூசாரி மாதிரி ஆகிவிடுகிறார்.

அப்படிப்பட்ட பூசாரி சுந்தரவடிவேலு. இந்த சர்வகலாசாலைக்கு அவா தகுதியற்றவர். நிர்வாண லோக உபமானம் மாதிரி. இருந்தாலும் செய்கிறதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் அபார 'உரித்து' உள்ளவர்.

சுந்தரவடிவேலு தம் வீட்டுக்குள் அடைபட்டுப், பையன்கள் "அதற்கென்ன சந்தேகம்" என்று அழைப்பதையெல்லாம் சகித்து, அவர்கள் விதியை நிர்ணயிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கையில், தெருவில், அவர் வசம் தன் விதியைச் சிக்கவைத்துத் தவிக்கும் ஒரு மாணவன் நடைபோடுகிறான். மார்க்கை அறிந்து கொள்ளுவதிலும் சாத்தியமானால் அதைத் திருத்துவதிலும் மாணவர் காட்டும் பிரயாசை மஹிராவணன் உயிரைத் தேடிப்போன அநுமாருக்குக்கூட இருக்காது. பணத்தெம்பு சிறிது இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டியதில்லை. குறிப்பிட்ட ஆசிரியர் இந்த விபசாரித்தனத்தில் ஈடுபடுகிறவராக இல்லாவிட்டால், அவா வீட்டு வேலைக்காரனின் யோக்கியதாம்சம் அவர்கள் கவனத்திற்கு வரும்.

அப்படி வந்தவன் சுந்தரவடிவேலுடைய வேலைக்காரன். எஜமான் வெளியே போயிருக்கும் சமயத்தில் பையனை அனுமதிப்பதாக வாக்களித்துவிட்டான். ஆனால் சுந்தரவடிவேலு வீட்டைவிட்டு வெளியேறுகிறவராகத் தென்படவில்லை.

இந்தப் பையன் தெருவில் நடைபோட்டுக்கொண்டு மார்க்கின் மேல் ஏகாக்கிர சிந்தனையுடன் யோகம் செய்ய முடியும். கண்களை நாலா திசையிலும் திருப்பிலிட்டான்.

சுந்தரவடிவேலு வீட்டின் படுக்கையறை மாடியில் இருந்தது. அதில்தான் மரகதம் தன் உடைகளை வைத்துக்கொண்டிருப்பது. அவள் உடை மாற்றுவது என்றாலும் தலை கோதிச் சீவிக்கொள்ளுவது என்றாலும் அங்கேதான்.

மாணவன், பலமுறை பரீட்சை மண்டபத்தில், புத்திசாலித்தனத்தை சூது விளையாடிப் பார்த்தும் சலியாத தனியாண்மை தறுகண் வீரன். Mofussil Graduate மோஸ்தர். ஆயிரக்கால் மண்டபம் அமைக்க ஆரம்பித்து இரண்டு தூண்களை நிறுத்தியபின் காரியத்தையே மறந்து போனதுபோல கன்னத்திற்கு ஒரு தூண் கட்டிய கேரா. தண்ணீர் விட்டுத் தளதளப்பாக வளர்க்காதது போன்ற கனத்த மயிரை

694

சிற்றன்னை