உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58. பிரம்ம ராக்ஷஸ்

முதல் வெளியீடு : மணிக்கொடி, 29.3.1936
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) தலைப்பு : 'பிர்ம ராக்ஷஸ்' (2) ப. 355, 4ஆம் பத்தி கடைசி வரிக்குப் பதிலாக, "இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே கண். உடல் முழுவதுமே செவி. உடல் முழுவதுமே வாய்" என உள்ளது.

(3) ப. 356, 4ஆம் பத்தியில், 3ஆம் வாக்கியம், "சப்த கன்னிகைகள் நடமாடுவார்களாம். யக்ஷ கண்விகைகள் திரிவார்களாம்" என அமைந்துள்ளது.

59. விநாயக சதுர்த்தி

முதல் வெளியீடு: மணிக்கொடி, 30.9.1936
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு :

(1) ப. 367,1ஆம் பத்தி, 2ஆம் வாக்கியத்திற்குப் பிறகு உள்ள பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:
"அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோர்த்துக் கொண்டிருந்தேன். ஆமாம்! பட்டணத்திலே மாவிலைக்குக்கூட காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். பொருளாதார சாஸ்திரி சொவலுவான், கமாடிட்டிக்கு (commodiy பொருள்; பொருள் என்றால் அ·(ப்) பொருளாதார பதம்; நாசூக்கற்ற வார்த்தை நாலு வார்த்தை தெரித்திருக்கிறது என்றாவது காட்ட வேண்டாமா?) காஸ்ட் இல்லை; லேபர் காஸ்ட்தான் என்று விளக்குவார் - பச்சைத் தமிழில் மாவிலைக்கு விலையில்லை; மரத்தில் ஏறி பறிப்பதற்குத்தான் கூலி. உப்பு மாதிரி- உப்பிலே - நீங்க ஒத்தரும் வரப்படாது. நான்தான் செய்ய வேண்டிய வேலை என்கிறான் சாக்கார்க்காரன்; பழையகாலத்தில் செத்த மாட்டுத் தோலை உரிக்க உரிமை 'நமக்குத்தான் உண்டு' என்ற பறையன் மாதிரி; கோவிலில் பூஜை செய்ய எனக்குத்தான் குறிச்சிட்டு கடவுள் எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று கோவில் கதவைத் தாளிடும் பூசாரி மாதிரி. ஆமாம். ஓங்கூரிலே நீர் இருந்தால் மாவிவைக்குக்காகக் கொடுக்கவே மாட்டீர் என்பது வாஸ்தவம். உமக்கு நாலு கோட்டை விதைப் பாட்டுக்கு வழியிருந்தால் சங்கிவித் தேவனை “டேய் ரெண்டு மாங்கொளை (மாங்குழை - மாவிலைக் கொத்து) பறிச்சாடா" என்று அதட்டலாம். நிலம் இல்வை என்றால் இடுப்பில் துணியை வரிந்து கட்டிக்கொண்டு நீரோ அல்லது புத்திர பாக்கியமோ மரத்தில் ஏறி இந்த 'லேபர்' காஸ்டை மிச்சப்படுத்திவிடலாம். ஆனால் ஒன்று; நீர் ஏறுகிற மரத்துக்காரன் உம்மை மரத்தோடு கட்டிவைக்கப் பிரியப்படாமல் இருந்தால், ஆமாம். இந்த 'ரிஸ்க்' எவ்லாம் நினைத்துத்தான் பட்டணத்துவாசிகள் எல்லாப் பொருள்களையும் காசுகொடுத்தே வாங்க முயற்சிக்கிறார்கள். அதுதான் அழகு; அதுதான் நாகரிகம். பட்டணத்திலே ஆந்தைகள் மாதிரி, வீடுகள் என்று சொந்தக்காரர் கையடித்துக்கொடுக்கும் பொந்துகளில் வசிக்கும் என் போன்றவர்-

புதுமைப்பித்தன் கதைகள்

809