பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 3 ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் தனது புத்தகத்தில் பதிவு செய்யும்போது தெரிவித்தாள். "ஏன் நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’ என்று வியப்பினல் விழிகளை உயர்த்தியபடி அவள் கேட்டாள். எங்கள் கண்கள் சந்தித்தன. வாதுமை போன்ற வடிவத்தைக் கொண்டிருந்த அவளுடைய சாம்பல் நிறக் கண்களின் அழகு என்னைத் தாக்கியது. அதனல் அவள் கேள்விக்குப் பதில் அளிக்க மறந்தேன். அவள் என்னிடம் வருத்தம் கொள்வதற்கு மாருக, என் பார்வையைக் கண்டு தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். 'அட, இதைப் பாரேன்! உன்னையும் கவனிப்பதற்குச் சில பேர் இருக்கிருர்கள்’’ என்று எனக்கு நானே சொன்னேன். இது அடிக்கடி நிகழக்கூடியதுபோல், சில பேர்’ என்று சொன்னேனே தவிர, உன்மையில் என் பார்வையைக் கண்டு ஒரு பெண் தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டது. இதுதான் முதல் தடவை யாகும். ஆமாம். முதல் முதல் தடவை. 'நீங்கள் அதிகம் பிரயாணம் செய்ததால், உங்களுக்குக் கல்யாணம் பண்ண நேரம் இல்லாமல் போய்விட்டது என்று நான் யூகிக்கிறேன்’ என்று அவன் எல்லாம் தெரிந்த தோரணை யில் பேசினன். நான் ஆர்மேனியாவின் எல்லைகளுக்கு அப்பால் போனதே யில்லை; பெண்கள் என்னை விரும்பாததனலேயே நான் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்பதை அவர்களுக்கு நான் விளக்கிச் சொல்லவில்லை. நான் எதுவும் பேசவில்லை. அனுபவம் நிறைந்த பிரயாணியாக அந்தக் குழந்தை என்னை மதிப்பிடுகிறது; அவன் தாய் தனது விழிகளேத் தாழ்த்தினுள் . மாலையில், எனது லாரியில் பாரம் ஏற்றியானதும், நான் அதை முற்றத்துக்கு ஒட்டிவந்து நிறுத்திவிட்டு மாடிக்குப் போனேன். SAASAASAASAASAASAASAASAASAAMMS விடுதியில் நான் மட்டுமே விருந்தினன். அதனல் மிகச் சிறந்த அறை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனல், நான் என் அறைக்குப் போகவில்லை. நடு அறையில் கிடந்த ஒரு சளிச்சேரில் உட்கார்ந்து காத்திருந் தேன். நான் காத்துக்கொண்டிருந்தது மகனுக்காகவா, அல்லது முற்றத்தில் யாருடனே பேசி நின்ற அம்மாவுக்காகவா என்பதை நான் சொல்ல இயலாது. பையன்தான் அங்கே வந்தான். நான் அவனை முதல் முறை யாகக் கூர்ந்து நோக்கினேன். அவனுக்குப் பெரிய கண்கள்-அவன் முகத்தில் கண்களைத் தவிர வேறு எதுவுமில்லை என்று தோன்றும் அளவுக்குப் பெரிய கண்கள்-இருந்ததைக் கவனித்தேன்.