உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாலாக்ஷியின் ஸங்கடங்கள்

௭௯

மிருந்து உயர்ந்த விலையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அதற்குத் தங்கக் கம்பி போட்டு மாட்டிக் கொண்டிருந்தார். முகம் நன்றாக க்ஷவரம் பண்ணி மிகவும் தளதளப்பாகவும் அழகாகவுமிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை புரியவில்லையென்றேன். ஏன்? என்ன செய்து கொண்டிருந்தார்? மெல்ல மாடியை விட்டுக் கீழே இறங்கினார். விசாலாக்ஷி படுத்திருந்த அறைக்குப் புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல அசைத்துப் பார்த்தார். கதவு விசாலாக்ஷியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார். விசாலாக்ஷி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்று கொண்டு அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்ரஹத்தைக் கண்டார். தன்னை மறந்து போய் அவள் மேலே கையைப் போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரைப் பார்த்தவுடன் அஞ்சி மார்புத் துணியை நேரே போர்த்துக் கொண்டாள். அப்பால் இவரை நோக்கி மிகவும் கோபத்துடன்:— “இங்கெதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர்?” என்று கேட்டாள். இவர் ஏதோ வழவழவென்று மறுமொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் முகக் குறிகளாலும் இவருடைய ஹ்ருதயம் சுத்தமில்லையென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில் சொருகியிருந்த கூரிய கத்தியன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள். இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து