உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮0

சந்திரிகை

நின்றார். இவர் இங்ஙனம் நிற்பதைக் கண்டு விசாலாக்ஷி இடிபோன்ற உரத்த குரலில்:— “இங்கிருந்து வெளியேறிப் போம்” என்றலறினாள்.

“குழந்தையை எழுப்பி விடாதே” என்று ஸோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே கிளுகிளுத்துச் சொன்னார். முன்னைக் காட்டிலும் உரப்பாக விசாலாக்ஷி முப்பத்து மூன்று இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில்:— “போம்; இங்கிருந்து வெளியேறி!” என்று மற்றொரு முறை கர்ஜித்தாள். ஸோமநாதய்யர் வெலவெலத்துப் போய் வெளியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள்ளே போய், அறைக் கதவைச் சார்த்தித் தாழிட்டு, விளக்கையணைத்துவிட்டு உள்ளே கட்டில் மீது படுத்துக் கொண்டு மேலெல்லாம் போர்வை போட்டு மூடிக் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் வெயர்த்தது. போர்வையைக் கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் ஸஹிக்க முடியவில்லை. நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டுவது போன்ற வேதனையுண்டாயிற்று. அவருடைய ஹ்ருதயத்தில் ஆயிரம் பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வது போன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது. அவருக்குத் தூக்கமெப்படி வரும்?

கீழே விசாலாக்ஷி, இவர் வெளியேறியவுடன் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு