விடுதலை
௮௧
மறுபடி கட்டிலின்மேல் வந்து படுத்துச் சில கணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டாள். மழை சரசரவென்று பொழிந்து கொண்டிருக்கிறது.
[ஆறாம் அத்யாயம் முற்றிற்று.]
ஏழாம் அத்யாயம்.
“ஒரு கால் விடுதலை யுற்றான்
எப்போதும் விடுதலை யுற்றான்”
மறுநாட் பொழுது விடிந்தது. ஸோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம், அவடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்துஸுப்பா தீக்ஷிதரும், குப்புசாமி தீக்ஷிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துஸுப்பாதீக்ஷிதரே புரோஹிதர். இவ்விருவரும் காலையில் பத்து மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை ஸோமநாதய்யர் மெத்தையைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. அவருக்குப் பலமான தலை நோவு.
இதனிடையே தீக்ஷிதரிருவரும் சும்மா பதுமைகள் போல் உட்காரந்திருக்க மனமில்லாமல் வேதாந்த விசாரணையில் புகுந்தனர்.
முத்துஸுப்பா தீக்ஷிதர் சொன்னார்:— “ஜீவன்
ச. சு