ஓர் இரவு
79
தே : இது என்ன உளறல், ஊழலா?
சொ : உன் மனைவியின் யோக்யதையை.
[கூறிவிட்டு, மிரள மிரள விழிக்கிறாள். ஆத்திரத்துடன். கண்களிலே நீர் கொப்பளிக்கிறது. தேவருக்கும் அந்தச் சொல்லைக் கேட்டதும் ஆத்திரம் பொங்குகிறது.]
தே : பவானிமீதா பழி சுமத்துகிறாய்?
சொ : பவானி! பவானியும் ஒரு சொர்ணம்தான்!
[அதிகக் கோபமடைந்த தேவர், அருகே நின்றிருந்த சொர்ணத்தை எட்டி உதைக்கிறார்.]
தே : கழுதே! கொன்றுவிடுவேன், பவானியை! நாயே!
சொ : (தைரியமாக ) வேதனைப்படு! ஆனால் பொய்யல்ல நான் பேசுவது.
[துள்ளி எழுந்திருக்கிறார் தேவர். சொர்ணத்தின் தலை மயிரைப் பிடித்திழுத்துக் குலுக்கி]
தே : புறப்படு! ருஜு காட்டு! நாயே! உத்தமி பவானியையா கேவலமாகப் பேசுகிறாய்?
சொ : வா!
[இருவரும் ஆவேசம் பிடித்தவர்கள் போலக் கிளம்புகின்றனர்.
தேவரால் சரியாகநடக்க முடியவில்லை. காலைத் தேய்த்துத் தேய்த்து நடக்கவேண்டி இருக்கிறது. ஆத்திரம் அவருக்குப் புது சக்தி அளித்திருக்கிறது. சொர்ணம், தேவரின் கரத்தைப் பிடித்திழுக்கிறாள். இருவரும் செல்கின்றனர்.]
காட்சி - 32
இடம் :- சீமான் மாளிகை.
இருப்போர் :- சீமான். ஜெகவீரன். விலாசனி, நண்பர்கள்.
[விலாசனி. பாடி முடித்ததும், நண்பர்களும், சீமானும் "சபாஷ்'" என்று புகழ்கிறார்கள்.]