24
தமிழ்நாடா? திராவிடநாடா? என்ற பேச்சுக்குப் பின்னாலே பதுங்கிக்கொண்டு, தென்னாட்டைச் சுரண்டிக்கெடுக்கும் வடநாட்டு முதலாளிகளின் கோட்டையாகிவிட்ட இந்தியப் பேரரசு எனும் புதிய ஏகாதிபத்தியத்துக்கு உடந்தையாக இருப்பவர் எவரேனும், அவரினும் இழிதன்மையான செயல் புரிவோர் வேறெவரும் இருக்கமுடியாது.
தம்பி! என்னைப்பற்றி, என் திறமைக்குறைவு, தெளிவற்ற தன்மை, பெருந்தலைவர்களிடம் பேசமுடியாத பயங்கொள்ளித்தனம், என்ற எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசி மகிழட்டும்; மகிழக்கூடியவர்களுக்கு விருந்தளிக்கட்டும். நான் துளிகூட வருத்தப்படவில்லை. ஆனால், அதே வேகத்துடன், விறுவிறுப்புடன், நம்மை அடிமைப்படுத்தி, அலைக்கழிக்கும் ‘ஏக இந்தியா’ எனும் ஏற்பாட்டை, எதிர்த்துத் தாக்கினால் போதும்.
அண்ணன் என்பவன் யாரடா!
அப்படி ஒருவனெனக் கேனடா!
என்று வீரச்சிந்து கேட்போரைப் பரவசப்படுத்தும் அளவுக்குப் பாடட்டும். ஆனால், வடநாட்டு ஆதிக்கத்தால் வதைபடும் மக்களை விடுவிக்க, வீரம் கொந்தளிக்கும் வெண்பாக்கள் பாடுவதை, விட்டுவிட வேண்டாமென்று தான் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு தனி ஆள்—மிகச் சாதாரணமானவன் — என்னை அடக்க, அல்லது அழிக்க, இத்தனை பெரிய முயற்சியும் ஆற்றலும் தேவையா!! அந்த ஆற்றலை, நமது மக்களை, சிங்களத்துத்துக்கும், சிங்கப்பூருக்கும், ஜான்சியாருக்கும், மோரிசுக்கும், நெட்டாலுக்கும் துரத்திவிட்டிருக்கிற இந்தியப் பேரரசின்—ஆதிக்கத்தை எதிர்த்திடப் பயன்படுத்த வேண்டும். வெண்ணைய் வெட்ட வாள் ஏன்? என்னைத் தாக்கவா இவர்களின் அறிவாற்றல் தேவைப்பட வேண்டும்!
ஐயம் ஏற்படும், நாட்டுமக்களுக்கு, இவர்களுக்கு உள்ள ஆற்றல் இந்த அண்ணாத்துரையை ஏசமட்டுமே பயன்படும் அளவு போலும் என்று!!
அதுமட்டுமல்ல! அவனோடு இருந்தபோது, வடநாட்டு ஏகாதிபத்தியத்தைத் தாக்க, நேருவிலிருந்து நேருதாசர் வரையிலே. “ஏ! மாமிச மலைகளே! சோற்றாலடித்த பிண்டங்களே! உணர்ச்சியற்ற உருவாரங்களே!” என்றெல்லாம் கண்டித்தார்கள். இடிமுழக்கமிட்டு, இப்போது ஒரு வார்த்தை கூறப் பயப்படுகிறார்களே! அந்த இடத்தைவிட்டு வந்து