இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௮
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பயிற்சிசெய்
லீலை யிவ்வுலகு.
(உ)லுத்தரை யிகழ்.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிக மாற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சிகொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு.
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமைசெய்.
வையத் தலைமைகொள்.
வௌவுதல் நீக்கு.
Bharathi Prachuralayam P. I. Card No. 407