இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௭
மூப்பினுக் கிடங்கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ்செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனங் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபஞ் செம்மைசெய்.
ரேகையிற் கனிகொள்.
ரோதனந் தவிர்.