உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய ஆத்திசூடி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்புசெய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக் கிடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக் கஞ்சேல்.
பொய்மை யிகழ்.
போர்த்தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமா றுணர்ந்துகொள்.
முனையிலே முகத்துநில்.