உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய ஆத்திசூடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வம் நீ யென்றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உயர்வு செய்.
தொன்மைக் கஞ்சேல்.
தோல்வியிற் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினைசெய்.
நினைப்பது முடியும்.
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.