நவதந்திரக் கதைகள்
83
வேலையு மேற்படாது. நமது நிலைமை மிகவும் கொண்டாட்டமாய் விடும்.”
இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன் :— ”கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வர மாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனில்லை” என்றது.
கழுதைக்குக் கோபமுண்டாய்விட்டது. கழுதை சொல்லுகிறது:—
”செல்வமும், அழகும், கல்வியும், வலிமையும் ஐந்துக்களுக்கு அதிக கர்வத்தை உண்டாக்குகின்றன. தன்னைக் காட்டிலும் இந்த நிமிஷம் ஒரு விஷயத்திலே தணிந்திருப்பவன் எப்போதும் தணிவாகவே யிருப்பானென்று மூடன் நினைக்கிறான். எந்தத் தொழிலும் யாருக்கும் வரும். வருந்தினால் வாராத தொன்றுமில்லை. பார்ப்பாரப் பிள்ளைக்கு வியாபாரத் தொழில் வாராதென்று சொல்லி நகைத்த செட்டி அவமானமடைந்த கதை உனக்குத் தெரியாதோ?”
”அதென்ன கதை?” என்று மதுகண்டிகை கேட்டது
மாணிக்கஞ் செட்டி
மானி அய்யனை நகைத்தது
அப்போது ரஸிக சிரோமணி சொல்லுகிறது :—
கேளாய், கர்வம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே! பல வருஷங்களின் முன்பு மதுரை மாசி வீதி மளிகை மாணிக்கஞ் செட்டி என்றொருவனிருந்தான். அவனுடைய தந்தை மளிகை வியாபாரஞ் செய்து கடன்பட்டு வீடு வாசலையிழந்து ஏழ்மையிலே இறந்து போனான். பின்பு மாணிக்கஞ் செட்டியின் தாய் கடலை சுண்டலும், தோசையும்