உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

அலைந்து அலர் கிளப்பி வாழ்ந்ததில்லை! ஆரணங்கே வேண்டாம், நான் அடவி செல்வேன் என்று அகடவிகடம் பேசி அடம் செய்தும் இருக்கவில்லை. அவளா? இவளா? என்று எடைபோட்டுப் பார்த்ததுண்டு! மனதில் இடம் பிடித்த மங்கையிடம் பணிந்துவிட்டேன்! மலர்த்தோட்டமாகியது மண்குடிசை, அவள் கால்பட்டு! இருக்கும் நாற்பதாண்டுக்கும் மேலாக! இலுப்பைத் தோப்பாக இருந்தது, இன்றுள்ள மணிக் கூண்டு! ஏலப்பப் பிள்ளை வீட்டில் ஏது மோட்டாரெல்லாம் அப்போது! சின்ன மாடி வீடு! சத்திரம் கட்டியதில், சரியாகத் தட்டிவிட்டார்! பழைய கதை அதெல்லாம்! ஆமாம்! ஆனால், அன்றுபோலத்தான் இன்றும், ஊரணியில் வருகிறார்கள், உறவு முறை பெறுகிறார்கள்! உன்மத்தனாடா நீ! ஒரு நாழிகைப் பொழுது ஓயாமல் நான் பேசி நிற்க, பதிலேதும் கூறாமல், காளை உடலை, கல்லென்று எண்ணிக்கொண்டு, தேய்த்தபடி இருக்கிறாயே! வாய்விட்டா அது சொல்லும். போதுமய்யா தேய்ப்பு என்று! வாயுள்ளதுகளெல்லாம், கண்ணால் பேசிடும் காலமல்லவோ இதுவும்! வருகிறேன், உன் வீடு! இரவு, எட்டுக்கு மேலாக! பார்! பார்! மன்னார், நான் கூறப்போவது கேட்டு, உனைப் படுத்தப்போகும் பாடு! ஊர்கூட்டி உனை நிறுத்தி; வாழத்தெரியாதான், வகையில்லான் என் மகனும்! வழிகாட்டும் விளக்கு வேண்டும், இல்லையேல் வழுக்கிடுவான்! திருவிளக்கு இது காணீர்! திருவினரே! வாழ்த்துவீரே! என்று மன்றமுள்ளோர் எல்லோர்க்கும் மகிழ்ச்சிபொங்க பொங்கக் கூறி, உனை மனையறம் பயிலும் வேலை ஏற்றிடச் சொல்வான், பார்! பார்!— என்றெல்லாம் முதியவர் மொழிகிறார், அவளும் கேட்க! ஆயிரத்தெட்டுப்பேர்க்கு, அவர் மணம் முடித்ததுண்டு! ஏடெடுத்தால், பார்வை மங்கியது விளங்கும் அவர்க்கு! மடுவும் மாந்தோப்பும், ஊருணிக் கரையும் உச்சி மாகாளிக் கோயிலும், ‘சந்திப்பு’ இடமாகும், சேதி காதில் வீழ்ந்திட்டால் போதும்; செல்வார்; கண்ணொளி நிரம்பி நிற்கும்; காட்சியும் காண்பார்; மனதில் உள்ள கருத்தையும் காண்பார் இந்தப் பொல்லாத புலவன்! அவர் தான், இந்தப் புறநானூற்றுக்கேற்ற புனலோரம் காணுகின்றார் அகநானூற்றிலொன்று; மகிழ்கின்றார்.

கேட்டது போதும், இஃதே இன்றெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடத்தக்கது. ஆமாம்! தாயும், என்னவோ ஏதோவென்று ஏங்குவாள் நேரம் சென்றால்! இவர்கட்கு என்னவேலை! திருக்குறள்தனையே வள்ளுவர் செய்துமே அளிக்காவிட்டால்; ஒவ்வொரு குறளில் காணும் ஒவ்வொரு கருத்திற்கும், பாரதம் பாடிக் காலம் பாழ்படச் செய்வார், ஓயாப் பேச்சிலே