உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

புன்னைமரம் காளையின் கனவு, முதியவர் பேச்சு, எல்லாம்! கனவில்!! தாயைப்போல மகள்! தங்கத்தாலான சிலை! என்று ஊரார் பேசுவது, உதட்டோரம் சிரிப்பளித்து, இனிப்பளித்து நிற்கிறது. கரும்பறியாச் சுவைதானும், கலந்திருப்பதுபோல, நினைப்பில் இனிப்பேற்றும் நிலைபெறப் போவதனை அறியாது. குழந்தை, அழகு துயில்கொள்கிறது.

பதினெட்டு ஆண்டுகளைக் கடக்கவேண்டும், செல்வி பாவையாகிக், குறுநகைக் குமரனின் மனமதை வென்று, அவன், பைந்தமிழ்ப் பாடலின் பொருட்சுவை யூட்டிடும் புலவரின் பேச்சிலே கிடைத்திடும் இனிமையை நுகர்ந்திருந்த நிலைமாறி, ‘கண்டுபோல் மொழி! வண்டுசேர் குழல்! கண்களோ சேல்! மதி, முகம்! வேய், தோள்! என்றெல்லாம் அவளைப்பற்றி நெஞ்சு நெகிழப் பேசவும், அவன் ஆடல் பாடல் கூடம் மறந்து, அடலேறன்ன தோழர்கள் போர்முறை பயிலும் இடத்தை மறந்து, பழமுதிர் சோலை நோக்கிப் பறந்திடும் புள்ளே போன்றும், நீர்நிலை நாடிச்செல்லும் புள்ளி மானினமே போன்றும், சேல்விழி மாது செல்லும் ஊருணிப்பக்கம் சென்று, உலவிடும் போக்குக் கண்டோர், மலரணிக் கொண்டைச் சொருக்கிலே, மதுநிறை அவள்மொழிச் செருக்கிலே, நிலவெறி அங்கக் குலுக்கிலே, மனமது அழிந்த நிலையிலே மையல் கொண்டு அலைகிறான் வீணிலே, தொழிலையும் இழப்பன் சின்னாளிலே’, என்று கடிந்துரைத்திடக் கேட்டு, ‘காதலின் மேன்மை தன்னை உணர்ந்திடா மனத்தினார், கடுமொழி பேசுகின்றார்! விழிவலை வீழ்ந்தேனென்று வீணுக்கு ஏசுகின்றார்! இவர் எனை அறியமாட்டார்; என்நிலை காணமாட்டார்! கதிரொளி பட்டதாலே தாமரை இதழ் விரித்திடும், அந்த இயல்பினைக் கரையும் காக்கை அறியுமோ, கூறீர் ஐயா! புள்ளினம் இசையைத் தானே எழுப்பிடும் போதில், ஆங்கு செவிப்புலன் கெட்டோன், என்ன செப்புவான், அறியோமா, நாம்! பறை ஒலி மிகுந்தபோது, பண்ணொலி படுமோ காதில்! அடுப்பினில் ஏற்றியுள்ள பானையில் கொதியும் ஏறித், தளதளவென்றே சத்தம் கேட்டிடும்போது பித்தன், பானைக்கு என்ன நோயோ? பாவம் அழுகிறதே என்பான்; பானையுள் பாற்சோறு தானும் காணான்! அதுபோல, நீர்கொண்டு செல்லவந்தாள், என் நெஞ்சமே கொண்டு சென்றாள்! குளித்திட நானும் வந்தேன், நீரிலே நெருப்பே கண்டேன்! மறுப்பவர், உண்டு, ஆமாம்; மனதைப் பறிகொடுத்திடாதே என்று மதியுரைப்போரும் உண்டு. அன்னார் மறக்கின்றார் ஓர் உண்மைதன்னை ! கண்ணொடு கண்ணுமேதான் கலந்திட்டதாலே, காதல் அரும்-