உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பிற்று, மலராயிற்று; அறிந்திட இயலாதார்கள், அறிவுரை என்று எண்ணி அனல்வாரி வீசுகின்றார்; சுடுவது நெருப்பு, ஆமாம், எனினும் மனமது உலையே ஆகி! தழலிங்கு ஓங்கும் போது, இவர் தரும் சுடுசொல்தானும் என் செய்யும்; ஏன் இதை அறியவில்லை; ஊருணிக்கரையோ, அன்றி ஊர்க்கோடித் தோப்போ, எங்கோ முன்னம் எப்போதேனும் ஓர்நாள், இவர்கள் முறுவல் காட்டி நின்றவரல்லரோ? அவர்க்கு அன்று இருந்ததேபோல், எனக்கின்று இலையே என்று ஏன் இவர் எண்ணிடாமல், ஏதேதோ பேசுகின்றார்! இங்கு இவர்க்குப் பதிலைத் தேடி, வீசிடுவதற்கோ, நேரம்? என் மனம் கொள்ளை கொண்ட ஏந்திழை நடக்கும் பாதை இப்படி முள்ளும் கல்லும் நிரம்பி இருந்திடலாமோ? என்பதை எண்ணி எண்ணி ஏக்கமே கொண்டேன். நானும் என்ன நலமா? என்று கேட்கிறார், கேலியாக!! துளையில்லாக் கம்புதானும், குழலது ஆகாதன்றோ? நாணிலா வில்லால், என்ன காரியம் ஆகும், கூறீர்! திரியிலா விளக்கேபோலும், திருஇலா உருவம்போலும், பொன்னிலாப் பேழைபோலும் இருக்கின்றார்; வாழ்கின்றாராம்!! உண்பதும் உறங்குவதும், உற்றதோர் வேலைகள்தாம்! ஆயினும், வேறு இன்றி, இதனையே தொடர்ந்து செய்யும் பேதையர் தம்மைப் பெருமைக்குரியவர் என்றா சொல்வர்; பாவையைப் பெற்ற பின்னர், கடுகாகும் மலைகள் தாமும்! பட்டது விட்டுத்தள்ளு! என்றிவர் கூறிடக் கேட்டேன் நானும். பட்டது துளிர்த்த தென்று பேசுவர், புதுப்பாங்கு கண்டு, தொழிலிலே வெற்றி காண்பேன், தோகையாள் துணையைக் கொண்டு— என்றவன் எண்ணமிட்டபடி, புன்னை மரமிருக்கும் ஊருணிப் பக்கமதில் உலவுவான்! பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு!

இளமாதோ, இப்போதே காண்கின்றாள், அந்த இன்பச் சூழ்நிலையை; விழியும் திறந்தில்லை; விந்தை இஃதன்றோ!

விந்தை அல்ல! மனதிலே கொள்ளை ஆசை, மாதாகிப் போனவட்கு! மதலை மங்கையாவாள், மங்கையின் செங்கைகளுக்கு, வளைகளையிட்டும் வாரியே அணைத்துக்கொண்டும், வாழ்வினை அளிக்கவல்லான், வருவான் உரியபோதில்; எங்கு இவர் சந்திப்பார்கள்? என்னென்ன பேசுவார்கள்? என்றெல்லாம் எண்ணும் உள்ளம்; இயற்கைதான், வியப்பென்ன இதிலே!

மதலைகள் குதலைபேசி, மாமனை மாடு ஆக்கி, மனைகளில் ஆடிப்பாடி, பின்னர் மங்கையராகி, மணவாளர் தம்மைக் கொண்டு, மலர்ந்திடும் முல்லைதானும், மணம் பரப்பிடுதல்