113
போல, இல்லறம் தன்னில் நறுமணம் கமழ வாழ்ந்திடும் நிலையைக் கண்டாள்; தன் மகவு படுத்துறங்கும், தொட்டிலின் பக்கம் கீழே படுத்துறங்கிடும் போதினிலே, கண்ட காட்சியால் கொண்ட எண்ணங்கள், கனவெனும் உருவம் தன்னில் உறவாடக் காணுகின்றாள்; வியப்பென்ன? வினாக்கள் ஏன்? அன்னைக்கு உண்டன்றோ, ஆசை மகவு என்னென்னவிதமான ஏற்றம் பெறவேண்டுமென்ற நெஞ்சைத் தித்திக்க வைக்கும் நினைப்புகள் பற்பலவும்.
கனவென்று அதனைத் தள்ளிக், கருத்தறியாது போயின், கனிமீது தோல்கண்டு, சுவை ஏது என்றெண்ணிச், சுவை காணும் வாய்ப்பிழக்கும் போக்கினர் போலாவர்.
அன்னை காணும் கனவு, தன் மகவுக்கான எதிர்காலம் எங்ஙனம் இருத்தல் வேண்டுமென்று திட்டமிடுவதின், விளைவு!
கனவு கனவாகவே இருந்துவிடும் என்றெண்ணும் போக்கினர், பேதையர்! பேரறிவாளர் கண்ட கனவெல்லாம் நனவாகி, மாநிலத்தவர்க்கு இன்று மகிழ்வளிக்கக் காண்கின்றோம். எண்ணெய் திரியிட்டு ஏற்றிவைத்த விளக்கிருக்க, இந்த விளக்கைவிட ஒளிமிகுந்த நிலைபெற்று, எண்ணெய் திரியுமன்றி, எரியாதோ ஓர் விளக்கு, என்றெண்ணிக் கிடந்தவனை, இளித்தவாயன் என்றார், ஏனிந்தக் கனிவு என்றார்—ஆயினும் அதுபோன்ற கனவுகளால், அகிலம் பெற்ற பேறு அளவிட்டுக் கூறப்போமோ!
பெற்றோம் ஒரு மகவு — கிடத்தினோம் தொட்டிலிலே! யாருக்கு யார் உறவு? எத்தனை நாள் இவ்வுறவு! தூங்கி விழிக்கையிலே, துவண்டிடலாம். இச் சிசுவும் தொட்டில் கயிற்றுந்து, பொத்தென்று கீழே விழுந்து, ஆவி பிரிந்திடலாம், படுத்துறங்கும் குழவிக்கு மாந்தம் கண்டிடலாம், மார்ச்சளி பிடித்திடலாம்: தத்தி நடக்கையிலே கொத்திடலாம் ஓர் பாம்பு! யார் கண்டார், என்னென்ன ஆபத்து வருமென்று! சின்னஞ்சிறு விழிகள், வண்டுகளாய் உள்ளன! நன்று நன்றென்று நாலுபேர் கூறுகின்றார். அம்மை நோய் வந்தால், அழகான இக் கண்கள், ‘பூ’ விழுந்துபோனாலும் போய் விடலாம்; யார் கண்டார்! மாடு முட்டிடலாம், வெறிநாய் கடித்திடலாம்; அப்பன் வெறிபிடித்து அடித்து உடலை வாட்டிடலாம்! அத்தனைக்கும் தப்பி, ஆரணங்காய் வளர்ந்தாலும், உற்ற துணை கிடைக்காமல், உதைப்போனுக்கு வாழ்க்கைப்பட்டுக் அழுது கிடப்பாளோ, கிணற்றில் வீழ்வா-