114
ளோ, என்னென்ன விபத்துகளில் இவள் சிக்கிக் கொள்வாளோ? என்னாகுமோ, இவளின் எதிர்காலம்! யாரறிவார்!— என்றெல்லாம் தாய் எண்ண, பேயுள்ளம் இருக்கவேண்டும்.
தாயுள்ளம் இருந்திடுமோர் பாங்கினையே, கூறிவந்தேன்; தாய் வயிற்றிலுதித்தோர், எவருமே மறுத்திடார்கள்!
ஈன்றெடுத்த மகவினுக்கு எதிர்காலம் இருந்திடவேண்டும் விதம், யாது, என்று எண்ணமிட்டாள், அஃதே கனவு; அஃது கனவாகிப் போய்விடாது; காண்பாள், பெற்ற மகளின் பருவம் வளர்ந்த நிலை!
“வண்ணக் கிளியே வா! வா! கன்னல் தமிழே வா! வா! முல்லைமொட்டே வா! வா! அல்லி மலரே வா! வா! அந்தி அழகும் நிலவழகும், அணி அழகுள்ள தமிழழகும் ஒன்றாய்த் திரண்டு வந்துள்ள உயிரே, வா! வா! என்றெல்லாம் கனிவுடன் கூறிடவும், எதிர்காலம் குறித்துத் திட்டமிடவும், தாய் உள்ளத்தால் முடியும்.
தான் ஈன்றெடுத்த குழந்தைக்கு, பொன்னும் மணியும் பூட்டிப் புது ஆடைகள் அணிவித்துப் பொட்டிட்டுப் பூமுடித்து, போகவரப் பார்த்துப் பூரித்துப் பெருமைப்படுவது தாய் இயல்பு. தொட்டிலிலே துயிலுகின்ற மயில், தோகை விரித்தாடும் நாளை நினைவிலிருத்திக், கருத்தைக் கரும்பாக்கி மகிழ்வதுவும் தாய் இயல்பு. கனவுகள் காண்பதுவும், நினைவாக மாற்றிடும் மனதுடன்தான்; அதனை மறந்திடுதல் கூடாது.
கழனி காத்திடும் கணவன்—தொட்டிலில் துயிலும் குழவி—படுத்துறங்கும் பெருமாட்டி—இவைகளே, இந்த நேரத்தில், உருவாக, உண்மையாக, உள்ளன. அந்த உண்மை நிலையுடன், தாயன்பு (பற்று பாசம்) இணைந்து பிணைந்து, இழைந்து குழைந்து, எண்ணம் பல சுரந்து, இன்பக் கனவாகி, எதிர் காலம் உருவாகிறது.
கழனியில் காவலிருக்கும் கணவனுக்குப் பதில், ஒரு சோளக்கொல்லைப் பொம்மை!
தொட்டிலில் படுத்துறங்கும் குழந்தைக்குப் பதிலாக கூரைமீது வீழ்ந்துகிடக்கும் ஒரு மரப்பாச்சி!
தரையில் படுத்துறங்கும் தையலுக்குப் பதிலாக, ஒரு ஓவியம்!