உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

"அரசனுடைய ஆணை மகத்தானது; அதனைக்‌ குறித்துப்‌ பேசிட வழக்கறிஞர்கள்‌ அருகரல்லர்‌! ஆண்டவனுடைய செயலைக்‌ குறித்து மறுத்துரைப்பது நாத்திகம்‌! நல்ல கிருஸ்தவர்கள்‌ ஆண்டவனுடைய கருத்தை அவர்‌ வாக்கான வேதத்தின்‌ மூலம்‌ அறிந்துகொள்வர்‌; அது போலவே மன்னன்‌ இதனைச்‌ செய்யலாம்‌, இதனைச்‌ செய்‌தல்‌ கூடாது என்று மக்கள்‌ கூறுவது கூடாது, மன்னனுடைய கருத்தைக்‌ காட்டும்‌ சட்டத்தைக்‌ கொண்டு மக்கள்‌ ஒழுகவேண்டும்‌" என்று இதுபோது, ஜேம்ஸ்‌, நட்சத்திர மண்டபத்தில்‌ வெளிப்படையாகவே பேசினான்‌—இதே முறையை, சார்லசும்‌ கையாண்டான்‌. மக்கள்‌ மிரண்டனர்‌! ஆண்டவன்‌ அரசன்‌—என்று ஒரு பயங்கர எவ்வளவு கொடுமைகளையும்‌ செய்துவிட்டு, 'எல்லாம்‌ அவன்‌ சித்தம்‌' என்று கூறிவிடலாமே; மன்னர்கள்‌ இத்தகைய கொள்கையை நிலைநாட்டிவிட்டால்‌, பிறகு, அரசு முறையிலே நீதி நேர்மை ஒழுங்கு ஏது? மக்களுக்கு உரிமை தான் ஏது என்று எண்ணினர், அச்சமடைந்தனர்.

சார்லஸ்‌ மன்னன், மக்களின் மனதை மருட்டிய இந்தக் கொள்கையை மிகுந்த நம்பிக்கையுடன், கூசாமல் குளறாமல், தெளிவாகத் தைரியமாக, பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆசான் கூறுவதுபோலவும், சீடருக்குக்‌ குரு கூறுவது போலவும்‌, எடுத்துரைக்கக்‌ கண்ட மக்கள்,"அதேது, பித்தம்‌ போலாகிவிட்டது. இந்தக்‌ கொள்கை—இது அரண்மனையிலே குடிபுகுந்துவிட்டால்‌. நாடு, காடு தானாகும்" என்று எண்ணினர்‌; எனவே, எப்பாடுபட்டேனும்‌ இந்தக்‌ கேடான கொள்கையை ஒழித்தாக வேண்‌டும்‌, என்று உறுதி பூண்டனர்‌.

உல்லாச வாழ்க்கையைத்‌ தேடி அலைந்து ஊர்க்குடி கெடுக்கும் பக்கிங்காம் போன்றவர்களை அதிகாரத்தில்