87
மான மகிமையும் கிடையாதாம். கங்கையிலே நீராடினால், நோய்கள் தீர்ந்துபோகும், ஆரோக்கியம் வரும், என்று கூறுவதுகூட, ஆராய்ச்சி செய்து பார்த்ததில், உண்மை அல்ல என்று தெரிந்துவிட்டதாம்”
“உன் மகிமையை, புனிதத் தன்மையை மறுப்பது மட்டுமல்ல, மாபாவிகள்! நீ, உற்பத்தியாகும் இடம், உன்னதமான இமயம், என்பதையும் மறந்து, கேவலம், நோய்களைத் தீர்க்கும் அளவுக்குக்கூட உனக்கு வல்லமை இல்லை என்று கூறிவிட்டார்களா?”
“ஆமாம் - அது கேட்டது முதல் அடியாளுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. பலபேர் முன்னிலையில் பச்சையாக இதுபோல் பேசினர் - எவ்வளவுபேர் பரிகசித்தனரோ, தெரியவில்லை; எவ்வளவோ, யுகயுகமாக இருந்து வந்த பெருமையை ஒரு நொடியிலே, அழித்துவிட்டனர்.”
“காலக்கோளாறு, இது, கங்கா! கங்கை என் ஜடா முடியில் இருப்பவள் என்ற உண்மையைப் ‘புராணம்’ என்று, தள்ளிவிட்டாலும்கூட, கங்காதீர்த்தம், விசேஷமானது, மலையிலிருந்து கிளம்பி, மூலிகைகளின் சத்துக்கள் நிரம்பி, உடலுக்கு வலிவூட்டும் தன்மையைப் பெற்றிருக்கிறது, என்ற, முறையிலேயாவது, உன்னைப் பாராட்டக் கூடாதா? என்ன துணிவு! அந்த மகிமையும் கிடையாது என்றா கூறிவிட்டனர்”
“ஆமாம்! இதோ பாருங்கள்!!”
★★★
இவ்விதம் உரையாடல், பரமசிவனாருக்கும் கங்கா தேவியாருக்கும் நடைபெற்றது. கங்கா தேவியார், [1950, மார்ச் 17ந் தேதிய ‘இந்து’ இதழிலே இருந்து ஒரு செய்தியைப் படித்துக் காட்டினார்].