10
பிடி
என்று கூறுவர்—அவ்வளவு பயங்கரமான அழிவு. சாளுக்கியனின் படைகள், சண்ட மாருதத்தில் சிக்கிய கலம் சுக்கு நூறாவது போல, சின்னாபின்னமாயிற்று. ஊர் உருத் தெரியாது அழிந்தது. மன்னனும் களத்திலே பிணமானான். பல்லவப் படையின் தாக்குதலால், சாளுக்கிய சாம்ராஜ்யமே படுசூரணமாகிவிட்டது.
வாதாபி, இன்றைய பம்பாய் மாவட்டத்திலே உள்ள இடம்! அதனை அழித்த பல்லவப் படையோ, காஞ்சியிலிருந்து கிளம்பிச்சென்றது-பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரம் காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம்—வாதாபி!. இடையே, எவ்வளவு தொலைவு!! இடையே, எவ்வளவு ஆறுகள், காடுகள், நாடு நகரங்கள்! இவ்வளவையும் தாண்டிச் சென்று, சிங்கத்தை அதன் குகையிலே சென்று தாக்கிக் கொன்றிடும் வீரம்போல பல்லவனின் படை, மாற்றானின் மணிபுரிக்குச் சென்று, தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது.
சாளுக்கியன், சொந்த நாட்டுக்குள்ளிருந்து கொண்டு போர் நடத்தினான்—பல்லவனோ, எதிரி நாட்டுக்குள் நுழைந்து, கடும் போரிட்டு வெற்றி பெற்றான். மகத்தான வெற்றி! சாளுக்கிய மக்களின் மனதை மருட்டிவிட்டது, பல்லவ மாவீரர்களின் பேராற்றல்!
எங்கும் நாசம் நர்த்தனமாடிற்று! அழிவு எனும் அந்தகாரம் கப்பிக் கொண்டது சாளுக்கியத்தை. அந்த அழிவு கண்ட சாளுக்கிய வீரன் கதறினான், ‘பிடி சாம்பல்! முடிவிலொரு பிடி சாம்பலாகிவிட்டது சாளுக்கிய நாடு!!’ என்று.
அந்தச் சாளுக்கிய வீரனின் அழுகுரல் கேட்ட தமிழ் வீரர் சிலர், தாய்நாட்டைத் தீ தின்னக் கண்டு தேம்பியவனைப் பிடித்திழுத்துக் கேட்டனர், “ஏடா? மூடா! எதுக்குக் கதறுகிறாய்?” என்று “யாரிவன் பித்தன்! பிணக் குவியலுக்கிடையே பிதற்றிக் கிடக்கிறான்! பிடி சாம்பலாம், பிடி சாம்பல்! பேதை! தமிழ்நாட்டு வீரமெனும் வெந்தழலிற்-