உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

காரன்போல இந்திக்காரர் ஆட்சி செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பதல்லவா? இதைத்தான் இந்தி ஏகாதிபத்தியம் என்பது. மற்றொன்று, ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் திணிக்கவில்லை. நான் அறிந்த அளவில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சான்றோர்கள் ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று முறையிட்டு, பிறகே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது என்றேன்.

“பன்மொழிகள் ஆட்சி மொழிகளாவது நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறேன்” என்றார் ஒருவர்.

கடினம்—சங்கடம் என்றெல்லாம் சொல்லுங்கள்; நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறிவிடமுடியாது. பல மொழிகள் உள்ள இடத்தில், வேறுமார்க்கம் இல்லையே! என்று கூறினேன்.

மறுபடியும் ஒருவர் அடிப்படைக் கேள்வியைத் துவக்கினார். “என்ன காரணத்துக்காக இந்தியை வேண்டாமென்கிறீர்கள்” என்றார்.

பலமுறை பல காரணங்களைக் கூறியாகிவிட்டது. ஒன்றுமட்டும் மறுபடியும் வற்புறுத்துகிறேன். இந்தி சிலருக்கு, தாய்மொழி — தன்னாலே வருவது — பரம்பரைச் சொத்து—அந்த மொழியை நாங்கள் கற்றுத்தேறி இந்திக்காரருடன் போட்டியில் வென்று இடம் பிடிப்பது, நிரந்தரமான இடையூறு—இது அநீதி என்றேன்.

“இயற்கையான சக்திகளால் மொழிகள் வளர வேண்டும், பிறகு அவைகளிலிருந்து தொடர்புமொழி கிடைக்கவேண்டும் என்கின்றீர்? இயற்கையான சக்தியை என்ன செய்து பெறுவது?” என்று கேட்டார்.

சக்தி இன்னவிதம் பெறக்கூடியது என்று திட்டமிட்டுக் கூறமுடியாது. பொதுவான சில யோசனைகள் கூறுகிறேன். சகிப்புத்தன்மை வேண்டும், மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் இயல்பு வளரவேண்டும், ஆதிக்க நோக்கம் அகலவேண்டும், வெறித்தனம் என்-

அ. க.—13