192
“நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இந்தி ஆட்சிமொழி அல்ல என்று சர்க்கார் அறிவிக்கட்டும்; இந்தியைப் பரப்பும் காரியத்தில் சர்க்கார் ஈடுபடாமல் இருக்கட்டும்” என்று கூறினேன்.
இதுதான் முதலமைச்சர் கரத்துக்குப் பந்து ஆயிற்று! என்ன வேடிக்கையான இயல்பு!!
இந்தியை ஆட்சி மொழி ஆக்கும் திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிட வேண்டும் என்றேனே அது?
இந்தியைப் பரப்பும் வேலையில் சர்க்கார் ஈடுபடக்கூடாது என்றேனே, அது?
பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்றேனே, அது?
தொடர்பு மொழி என்று எதனையும் சர்க்கார் அறிவிக்கக்கூடாது என்றேனே, அது?
தொடர்பு மொழியாக, தொன்மையும் வளமையும் மிக்க தமிழ் ஏன் கொள்ளப்படக்கூடாது என்று கேட்டேனே, அது?
அவை ஒன்றுகூட முதலமைச்சருக்கு, முக்கியமானவையாகப் படவில்லை!! ஏன் என்று கேட்க நான் யார்!! அவரோ முதலமைச்சர்!! நானோ கருணாநிதிக்கு அண்ணன்? நான்போய்க் கேட்கலாமா அவ்வளவு பெரியவரை, இந்தச் சங்கடமான கேள்வியை!!
ஒரு நிருபர் கேட்டார், “ஆங்கிலத்தை வெள்ளைக்காரன் புகுத்திய போது ஏற்றுக்கொண்டீர்களே, இந்தியை அதுபோல ஏற்றுக்கொண்டால் என்ன?” என்று.
உம்முடைய கேள்வியின் தோரணையே அச்ச மூட்டுகிறதே ஐயா! வெள்ளைக்காரன் எப்படி ஆங்கிலத்தைக்கற்கச் சொன்னானோ அதுபோல இந்தியை ஏற்கச் சொல்கிறோம் என்றால் என்ன பொருள்? வெள்ளைக்-