உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

ஆங்கிலம் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருந்து வரவேண்டும். இதற்கு நாமாக ஒரு காலக்கெடு வைத்துக் கொள்ளக்கூடாது.

“பிறகு, ஒரு தொடர்பு மொழி வேண்டுமே. அது எது?”

அது எது என்பது மக்களாகப் பார்த்து, காலப்போக்கில், இயற்கையான சூழ்நிலையில், தீர்மானித்துக் கொள்ளவேண்டும். சர்க்கார் இன்ன மொழிதான் தொடர்பு மொழி என்று ஆணையிடக்கூடாது; ஆதரவு தரக்கூடாது; மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பதினான்கு மொழிகளில், எது தொடர்பு மொழியாகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? என்று கேட்டார் நிருபர்.

பதினான்கு மொழிகளில் ஏதாவது ஒன்று. தமிழுக்கு என்ன! வளமான மொழி! தொன்மையான மொழி! இலக்கியச் செறிவுள்ளது! தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாமே என்று நான் கூறினேன்.

“தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாமல்லவா?” என்று கேட்டார் மற்றொருவர். ‘சமஸ்கிருதமா, அது பேச்சு வழக்கு அற்ற மொழியாயிற்றே!’ என்றேன். மேலால் அவர் அந்தப் பிரச்சினையைத் தொடரவில்லை.

இந்தி ஆட்சிமொழி என்ற திட்டத்தைச் சர்க்கார் விட்டுவிட்டால், பிறகு இந்தி பரப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே? என்று ஒருவர் கேட்டார்.

இல்லை! ஆனால், அந்தப் பரப்பும் காரியத்தைச் சர்க்கார் செய்யக்கூடாது. மக்களின் அமைப்பு (அதிகார பூர்வமல்லாதது) செய்யவேண்டும் என்று கூறினேன்.

அப்போதுதான் அந்த நிருபர், கேட்டார், “நீங்கள் உதவி செய்வீர்களா?” என்று. நான் உடனே கூறினேன்,