196
நிருபர்; அதுபற்றித் தெளிவான எந்தத் திட்டமும் வெளியிடப்படவில்லை, ஆகவே, அதுபற்றி நான் கருத்தைச் செலுத்தவில்லை என்று பதிலளித்தேன்.
“தொடர்பு மொழி இயற்கையான சூழ்நிலையில் வரவேண்டும் என்கிறீரே, மக்கள் ஒரு சிறுபான்மை மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு விடக் கூடுமல்லவா?” என்று ஒருவர் கேட்டார்,
அப்படியும் நடக்கலாம். மற்றும் ஒன்று. வளமானதாக இருக்கிறதா என்று பார்த்து அத்தகைய மொழியை மக்கள் தொடர்பு மொழியாகக் கொள்ளக் கூடும் அதற்காகத்தான் நான் தமிழுக்காக வாதாடுகிறேன். தமிழ் அத்தனை வளமான மொழி!—என்று கூறினேன்.
ஒருவர், “வங்காள மொழியும் தான்” என்றார், சரி! தமிழ் போன்றே வங்காள மொழியும்; இருக்கட்டும் என்றேன். அவருடைய வங்காள மொழி ஆர்வம், பாராட்டத்தக்கது என உணர்ந்தேன்.
“சௌரி சௌரா பற்றிச் சொன்னீர்கள்—அங்கு வன்முறை நடந்து, கிளர்ச்சியை மகாத்மா வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆனாலும் அதற்காக, காங்கிரஸ், கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்துவிடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.
உண்மை நாங்கள்கூட கிளர்ச்சி செய்யும் உரிமையை இழந்துவிடச் சம்மதிக்கவில்லை, வன்முறையைக் கண்டிக்கிறோம். வன்முறை எழமுடியாத முறையில் கிளர்ச்சிகள் அமையவேண்டும் என்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறோம் ஆனால், கிளர்ச்சி நடத்தும் உரிமையை விட்டுவிடவில்லை என்று கூறினேன்.
“இந்தி ஒழிக! என்று முழக்கமிடுகிறீர்களே, இந்தி ஆதிக்கம் ஒழிக என்பதுதானே முழக்கமாக இருக்க வேண்டும்?” என்று ஒருவர் கேட்டார்.
இலட்சிய முழக்கங்கள் எடுப்பாக, சுருக்கமாக அமையவேண்டும். சர்க்காரின் இந்தி ஆட்சி மொழி