உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

129


வள்ளை அகவுவம் வா.
காணியவா வாழி தோழி! வரைத்தாழ்பு 10

வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம், அருளா
நாண்இலி நாட்டு மலை!
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர் கோல்
அறம்புரி நெஞ்சத்தவன்? 15

தண்ணறும் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்,
பொன்அணி யானைபோல் தோன்றுமே, நம்அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை!
கூருநோய் ஏய்ப்ப விடுவானோ, தன்மலை
நீரினும் சாயல் உடையவன்; நயந்தோர்க்குத் 20

தேர்ஈயும் வண்கை யவன்?
வரைஇசை மேல்தொடுத்த நெய்க்கண் இறாஅல்
மழைநுழை திங்கள்போல் தோன்றும், இழைநெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று!
எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி 25

அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்,
என்று யாம்பாட, மறை நின்று கேட்டனன்,
தாழ் இருங்கூந்தல் என் தோழியைக் கைகவியாச்
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர 30

ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது, என்
ஆயிழை மேனிப் பசப்பு."

புலியைக் கொன்று தன் பழம் பகையைத் தீர்த்துக் கொண்ட, முறம் போன்ற காதுகளையுடைய யானை, குளகுத் தழை மேய்ந்து, அருவிநீர்த் தாலாட்டில் அயர்ந்து உறங்கும் மலை நாடனாகிய நம் தலைவன், நம்மை மறந்தான். அவன் நம்மை மறந்தாலும், நமக்கு அவனே சிறந்தவன் என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆதலின், யானைக் கொம்பால் மூங்கில் நெல் குற்றும் நாம், உலக்கைப் பாட்டின் பொருளாக, அவன் சிறப்புக்களையே அமைத்துப் பாடுவோம். வருக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/130&oldid=1764807" இலிருந்து மீள்விக்கப்பட்டது