194
போடுகிறான்! கேள்! கேள்! கொடு கொடு என்று கொடுக்கிறான் என்று கூவுகிறார்கள், கூத்தாடுகிறார்கள், இதே காங்கிரஸ்காரர்; கூட இருந்துகொண்டே குட்டுகிறார், குடைகிறார், இடிக்கிறார், உடைக்கிறார், மானத்தைப் பறிக்கிறார்,யோக்கியதை கெட்டதை அம்பலமாக்குகிறார் இலட்சுமி மேனன்; திருடனைத் தேள் கொட்டியது போலல்லவா, திருதிருவென்று விழித்தபடி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.
இலட்சுமி மேனன் சொல்லியது, பொதுமக்கள் காதுக்கு எட்டாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று தந்திர முறையைக் கையாளுகிறார்களே ஒழியப், பொங்கி எழுகிறார்களா? முடியுமா? அச்சம்! இப்படிப் பேசலாமா என்று கேட்க ஆரம்பித்து, அம்மையார், நான் சொல்வதை மறுத்துப்பேச வக்கிருந்தால் பேசுங்கள் என்று கூறிக் ‘குரங்குப் புண்’ணாக விஷயம் ஆகிவிடப்போகிறது என்ற அச்சம். நல்லவேளை, இந்த அம்மையார், பொதுப்படையாகப் பேசினார்கள்; ஊரும் பேரும் சொல்லி மேலும் மானத்தைப் பறிக்காது விட்டு வைத்திருக்கிறார்களே, அதுவரையிலே இலாபம், என்ற நினைப்பிலே இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தவிர, தரமான, தகுதியான கட்சியே கிடையாது; அதிலே உள்ளவர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள், ஆளத் தெரிந்தவர்கள்; மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது, தன்னல மறுப்பும் கிடையாது என்று, மேடையிலே நின்று மார்தட்டிப் பேசுகிறார்கள் காங்கிரசார். அதிலும் எவ்வளவுக் கெவ்வளவு பேசுபவர்களுக்கும் காங்கிரசின் தியாகச் செயல் நிரம்பிய வரலாற்றுக்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உரத்த குரலில், உறுதி காட்டி, உருட்டி மிரட்டிப் பேசுகிறார்கள்.
திடீரென்று கேட்டால், தண்டி என்பது ஊரின் பெயரா, ஆளின் பெயரா என்றுகூடச் சந்தேகப்பட்டுக் குழம்பும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்.
ரவுலட் சட்டம் தெரியுமா என்று கேட்டுப்பார், தம்பி! புத்தம் புதுக்கதர் ஆடையை! விவரம் தெரியாமல் விழிப்பார்கள்! மகமதலி சவுக்கதலி தெரியுமா? தெரியாது! பாஞ்சாலத்திலே வீர மரபு ஏற்படுத்திய லாலா லஜபதிராய் வாழ்க்கை வரலாறு தெரியுமா? தெரியாது! வேறு என்ன தெரியும்? மந்திரியிடம் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொடுக்கக்கூடிய