102
அறிஞர் அண்ணா
வே : ஏண்ணேன், தெருவிலேயே நிற்கறே? உள்ளே வாண்ணேன்.
ஆ : வேதம்! மூணாவது வீட்டிலே ஒரு ஆசாமி வந்தானே இன்னக்கி கொஞ்சம் வயசானவனா, தங்கப் பூண்போட்ட தடி கூட வைச்சிருந்தானே.
வே : ஆமாம்!
ஆ : அவன் ஜெமீன்தாரனா?
வே : அப்பிடின்னுதான் சொல்லிக்கிறா அவ.
ஆ : சரி, போயி...
வே : இருக்கானான்னு பார்க்கச் சொல்றயா? அவன் போயி எவ்வளவு நேரமாச்சு. வெறுங்கையோடு வந்தானாம், அவ இலேசுப்பட்டவளா? வெள்ளிக்கிழமை விரதம்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டா.
[ஆறுமுகம் யோசிக்கிறான்.]
ர : டே? ஆறுமுகம்! நானும் இவரும் போய்த் தேடிப் பிடிக்கறோம். நீ, நம்ம வீட்டுக்குப் போ, அம்மாவுக்குக் காச்சல்.
ஆ : போறேன். இதோ.
[டாக்டர் சேகரும் ரத்னமும், அந்த இடத்தை விட்டுப் போகின்றனர்.]
காட்சி - 44
இடம் : பாதை.
இருப்போர் : சேகர், ரத்னம்.
சே : இரவு நேரத்திலே, என்னென்ன கண்றாவிக் காட்சிகள் ரத்னம்!
ர : நீங்களென்ன கண்டீர்கள். இராத்திரி வேளைன்னா, சங்கீதம், சரசம். குடும்பத்தில் சந்தோஷம் இவைகள்தான் இருக்குமென்று நினைக்கிறீர்கள். இவைகளைத்தான் பார்த்திருப்பீர்கள்.
இரண்டு உலகமல்லவா இருக்கிறது. உங்க உலகிலே இரவு பத்துமணி அடித்தா, தீர்ந்தது: சந்தடி கிடையாது..
எங்க உலகமிருக்கே. அதுக்கு, இரவு மணி பத்தானாத்தான் பொழுது விடியுதுன்னு அர்த்தம், தெருக்கோடிச் சண்டை, வீட்டு மேலே கல் வீசுவது, கலகம், கத்திக்குத்து, எல்லாம் அப்போதான் ஆரம்பமாகும். நீங்களெல்லாம் காலையிலே காப்பி சாப்பிட்டு விட்டதும் சுறுசுறுப்பா வேலை செய்விங்க. எங்க உலகத்திலே சுறுசுறுப்பு ராத்திரி பத்து அடிச்சதும், கள்ளோ, சாராயமோ