உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பிடி

“ஆனால் என்ன! அதனால் என்ன! பரஞ்ஜோதியின் புகழ், சைவத்துக்குத்தான் உரம் அளிக்கும். பாற்கடலிற் பள்ளிகொண்ட பரந்தாமனின் பக்தனான நரசிம்ம மன்னனின் மனமும், மெள்ள மெள்ள, சைவனாம் பரஞ்ஜோதியின் கீர்த்தியைக் கேட்டுக் கேட்டு மாறி...”

“மகேந்திர மன்னன் மகன்! வைணவத்தை விட்டு...”

“தந்தை போலத் திருநீற்றுப் பூச்சுக்காரனாவானோ!”

“நிச்சயம்! அரச அவையில் ஆற்றலரசன் பரஞ்ஜோதி வீற்றிருக்கும் வரை, வைணவத்துக்கு இந்த ஆபத்து ஏற்பட்டே தீரும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”

“ஏன் அப்படி எண்ணுகிறீர்! எம்பெருமானின் பெருமைகளை எடுத்துக் கூறுவோம். சைவம் உயர்ந்ததா வைணவம் சிறந்ததா என்பதை பரஞ்ஜோதியே முன்னின்று பேசுவதாயினும், நமது கட்சி ஜெயம் பெறச் செய்யும் சக்தி நமக்கு இல்லையா? மேலும் பரஞ்ஜோதி போரிலே புலி; போதகாசிரியனோ? வீரன்; ஆனால் வைணவத்தை வீழ்த்தக்கூடிய விவகார ஞர்னஸ்தனோ! வரட்டுமே, அப்படியொரு சந்தர்ப்பம். வைணவமே சிறந்தது என்று என்னால்—உங்கள் யாவரைக் காட்டிலும் ஞானத்திலே மிகக்குறைந்தவனான அடியேனால் ஸ்தாபிக்க முடியும்.”

“அசட்டுத்தனமான காரியம்! சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்று சண்டையிடத் தொடங்கினால், சமணம். மீண்டும் தலைதூக்கும்.”

“உண்மை! அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது.”

“அரி—அர ஒற்றுமைக்கு அவசியம் இருக்கிறது; அந்த ஆபத்தைப் போக்கும் அருமருந்து அது ஒன்றே மிச்சம். ஆகவே, சைவ—வைணவ விவாதம் கூடாது.”

“பிறகு...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/18&oldid=1765172" இலிருந்து மீள்விக்கப்பட்டது