55
முறையை எதிர்ப்பவர்களைச் சிறையிலே தள்ளிவிட்டு, இதுபற்றி யார் என்ன கேட்க முடியும் என்று இறுமாந்து கிடத்தல் இனி முடியாது! காரணம் காட்டியாக வேண்டும்!!
மன்னன் முகத்தில் உடனடியாகக் கரிபூசுவது போலாகிவிடுமே என்று அஞ்சியே, நீதிபதிகள், கைது செய்யப்பட்ட ஐவரை, ஜாமீனில்விட இணங்கவில்லை எனினும், அவர்களும், சிறைப்படுத்தப்பட்டவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை மன்னன் கூறியாகவேண்டும், கூறாமலேயே, அவர்களை நெடுங்காலம் சிறையிலே தள்ளிவைப்பது முறையாகாது என்று தெரிவித்து விட்டனர்.
அவர்களை விடுதலை செய்யும்படி மன்னன் உத்தரவு பிறப்பித்தான்! வேறு வழி!! நாடு, களிப்புக் கூத்தாடிற்று மன்னன் தோற்றான்; மக்கள் வெற்றிபெற்றனர்; இனி ‘இம்’மென்றால் சிறைவாசம் என்பது நடவாது, மன்னன் காரணம் காட்டியாக வேண்டும்! என்று கூறிக்களித்தனர் மாமன்றமும் மக்களும், இந்தச் சம்பவத்தால் புதிய மதிப்புப் பெற்றது, மன்னன் தன்னைச்சுற்றிக் கடுவிஷம் நிரம்பிய காற்றடிக்கிறது என்று கருதிக்கொண்டான். நாடு எவ்விதம் இருக்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் இதுபோல, பல நடைபெற்றன.
ஒரு முறை, ஆட்சிமுறையைக் கண்டித்து மாமன்றத்தில் பேச்சு நடைபெற்றபோது, மதத்துறையில் நாடு விரும்பாத மாறுதல்களைச் செய்பவர்களைக் கண்டிக்கத் தலைப்பட்டது! மாமன்றத்தின் மூலம், மக்களுடைய கருத்து எவ்வாறு செல்கிறது என்பதைக் கண்டறிந்து கொள்வதைப் பொறுப்புனர்ச்சியுள்ள மன்னன் ஓர் வாய்ப்பாகக் கருதுவான், சார்லசோ தன் ஆதிக்கத்-