உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பல்

51

யும் முயற்சியே மேலே தீட்டியுள்ள வரலாறு கலந்த கற்பனை உரை.

என் முடிவு இது! பரஞ்ஜோதி படைத் தலைவராக இருந்ததால், பல்லவ நாட்டின் ராணுவ பலத்தைச் சாளுக்கியம் உணர முடிந்தது—வாதாபி வீழ்ந்தது.

படைத் தலைவரிற் சிறந்த பரஞ்ஜோதி, சிறுத்தொண்டராகிவிட்ட பிறகு, பல்லவ நாட்டுப் படை பலம் சரிந்தது; தோல்வி வந்தது.

பரஞ்ஜோதி, சிறுத்தொண்டன் ஆனார் என்பதை நான், ஆக்கப்பட்டார் என்கிறேன்.

அதாவது, பரஞ்ஜோதியை, மன்னன், சைவன் என்ற காரணத்தைக் காட்டிப் பதவியிலிருந்து விலக்குகிறான்.

இதற்கு மூன்று காரணங்கள் இருக்க வேண்டுமென்பது என் யூகம்.

1. சாளுக்கியர் தந்திரம்.

2. சைவ, வைணவ ஆதிக்கப் போட்டி

3. மன்னனுக்குப் பரஞ்சோதியாரிடம் ஏற்பட்ட இலேசான பொறாமை.

இவைகளை அர்த்தமற்றன என்றோ, விஷம் நிறைந்தன என்றோ, விதண்டாவாதம் என்றோ குறைகூறப் பலர் உளர் என்பதை நான் அறிவேன். ஆனால், அவர்களை நான் கேட்க விரும்பும் சில கேள்விகளுக்கு அவர்களிடமிருந்தல்ல, உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்—அவர்களிடமிருந்து சிந்தனையை எதிர்பார்க்கிறேன்.

1.புகழ் பெற்ற பரஞ்ஜோதிக்குப் பிறகு, படைத்தளபதி என்ற பெயருக்குரிய வேறோர் வீரரின் பெயரும் பல்லவர் வரலாற்றில் இல்லாமற் போனது ஏன்?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/51&oldid=1766711" இலிருந்து மீள்விக்கப்பட்டது