52
பிடி
மன்னன் விலக்கினான் என்று எப்படிக் கூறலாம்? மன்னன், பரஞ்ஜோதியாரின் பெருமையை உணர்ந்தான் என்றன்றோ அதற்குப் பொருள் என்று அறனடியார்கள் கூறுவர். அவர்களுக்குக் கூறுகிறேன், மன்னன் விலக்கினார்—பரஞ்ஜோதி மறுத்தார்—திகைத்தார்—இந்தப் பாடல்களை மீண்டும் ஓர்முறை படிக்க வேண்டுகிறேன்—என்னை மறந்து.
உங்கள் கண்முன், பதவியில் இருக்கக் கூடாது என்று தந்திரமாகப் பேசும் மன்னனும், திகைக்கும் பரஞ்ஜோதியும் தெரிவர்.
மேலும், எத்தனையோ அடியார்களும், தொண்டர்களும், நாயன்மார்களும், சைவத்தின் பெருமையை நினைவூட்டவும், நிலைநாட்டவும் உளர்.
ஒரு பரஞ்ஜோதி சிறுத்தொண்டராக்கப்படாமல், படைத்தலைவராகவே இருக்க அனுமதித்தால், நஷ்டம் இல்லை, நாட்டுக்கும் சைவத்துக்கும். ஏற்கனவே, ஏராளமாக உள்ள அடியார் கூட்டத்தில், ராணுவ வரலாற்றுக்கே ஓர் தலை சிறந்த எடுத்துக்காட்டாக இன்றுவரை, உலக வரலாற்று ஏடுகள் வரை, யாருடைய பெயர் இருக்க வேண்டடுமோ, அந்தப் பரஞ்ஜோதியை அடியவர் கூட்டத்தில் சேர்த்து, வீரக்கோட்டத்துக்கு நஷ்டம், ஈடு செய்யமுடியாத நஷ்டத்தை உண்டாக்கிவிட்டனர். இது சரியா? சிந்திக்க வேண்டுகிறேன்.
சிந்தனையை, குறிப்பாகச் சிவநேசர்களின் சிந்தனையைக் கிளறவே இச்சிறு ஓவியம். பாராயணத்துக்குப் பயன்படுத்திய பாடல்களை, இதோ, சற்று நான் கூறினவை சரியா என்பதைப் பகுத்தறியப் பயன்படுத்திப் படித்துப் பாருங்கள்.