உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாம்பல்

53

மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரந் துகளாகத்துளை நெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார்.

பரஞ்ஜோதியார், தொன்னகரமாம் வாதாபியை வென்று அங்கிருந்து மணியும் அணியும், கரியும் பரியும் கொணர்ந்தார் என்று அறிவிக்கிறது இச்செய்யுள்.

கதிர்முடி மன்னனும் இவர் தங்களிற்றுரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப அறிந்த அமைச்சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலியுடமையினால்
எதிரிவருக் கிவ்வுலகிலில்லை என எடுத்து ரைத்தார்.

மன்னன் மகிழ்கிறான், பரஞ்ஜோதியாரின் ஆண்மையைக் கண்டு; அமைச்சர் கூறுகிறார்--பரஞ்ஜோதி, அறனடியார்; ஆகவேதான் வென்றார். அவருக்கு ஈடு இவ்வுலகில் இல்லை என்று கூறினர். இது இச் செய்யுளின் பொருள். "தம்பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார்வேந்தன் உம்பர்பிரான் அடியாரை உணராதே கெட்டொ வெம்பு கொடும் ழிந்தேன் போர்முனையில் விட்டிருந்தேன் எனவெருவுற் றெம்பெருமான் இது பொறுக்கவேண்டும் என் இறைஞ்சினான். சிவனடியாரா இவர் ! இவரையா - நான் போர்க்கள் வேலையில் ஈடுபடுத்தினேன், அபசாரம் என்று மன்னன் வருந்தினான் என்பது இச்செய்யுளின் பொருள். இதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/53&oldid=1766855" இலிருந்து மீள்விக்கப்பட்டது