உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இதன்‌ மூலம்‌ கிடைத்தது, முதலாம்‌ எட்வர்டு மன்னன்‌, இதுபோலக்‌ கட்டணம்‌ வசூலித்து, விருதுகள்‌ வழங்‌கினான்‌ இதனை முன்மாதிரியாகக்கொண்டு, பணம்‌ திரட்ட இதனைப்‌ பயன்படுத்தினான்‌; மாமன்றத்தை அழைக்‌காமல்‌ நாடாள விழைந்த மன்னன்‌.

லாட்‌, வென்ட்‌ஒர்த்‌, ஆகிய இருவரும்‌, மிகமிகப் பொருளற்ற காரணங்களுக்காக எல்லாம்‌, பணம்‌ படைத்தவர்களை வழக்கு மன்றத்திலே இழுத்து நிறுத்‌துவர்‌, பத்தாயிரம்‌, ஐம்பதாயிரம்‌ என்று அபராதம்‌! இது அரசாங்கத்து வளமான வருவாய்‌ ஆகிவிட்டது.

நெடுங்காலத்துக்கு முன்னம்‌, அரசர்களின்‌ சொந்தக்‌ காடுகள்‌ என்று ஏராளமாக உண்டு; நாளாகவாக, காடு அழிக்கப்பட்டு, வயல்களாகக்கப்பட்டன, சிற்றூர்கள்‌ வளர்ந்தன. பணம்‌ திரட்டுவற்கு என்னென்ன வழி என்று தேடியவண்ணம்‌ இருந்த மன்னனுக்கு, இது ஒரு வாய்ப்‌பாகத்‌ தெரிந்தது, நெடுங்காலத்துக்‌ கணக்கைத்‌ தோண்டி எடுத்தான்‌, அரசரின்‌ காடுகளை, சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டவர்களைக்‌ கண்டறிந்து, கடுமையான அபராதம்‌ விதிக்கலானான்‌. இரண்டாண்டுகளிலே 23,000 பவுன்‌ திரட்ட முடிந்தது, அத்துடன்‌, சிறு பிரபுக்‌களின்‌ சீற்றமும்‌ கிளம்பிற்று; மக்களை மதியாது நடத்தும்‌ மமதை ஆட்சிக்கு எதிர்ப்பு வலுத்திடலாயிற்று.

சோப்பு, முதலிய பலசரக்குகளை உற்பத்தி செய்வதற்கு, மன்னனிடம்‌ அனுமதி பெறவேண்டும்‌—அதற்குக்‌ கட்டணம்‌; கொழுத்த வேட்டையாயிற்று.

சரக்கு உற்பத்தி செய்ய அனுமதி பெறுவதுடன்‌, அதே சரக்கை வேறு யாரும்‌ உற்பத்தி செய்யாதிருக்கும்‌ படி தடை போடும்படி; மன்னரிடம்‌ உத்தரவு பெற முடிந்‌தது—பெரும்‌ பொருள்‌ கொடுத்து.