63
மாார்க்கத்துறைக்கே அதிபனான, லாட் என்பானும், சேர்ந்து செய்த கொடுமைமிக்க ஆட்சி, மன்னனையும், மன்னராட்சி எனும் முறையையும், அடியோடு வெறுக்கும் நிலையை உண்டாக்கிவைத்தது. இந்த இருவடைய வேகமான வளர்ச்சியையும், மோசமான கொடுமைகளையும் தடுக்கும் நிலையில் ஒருவரும் எழமுடியவில்லை, இருவரும் நண்பர்கள்!!
லாட், ஆணவம்மிக்கவன். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுபவன்.
வென்ட்ஒர்த், மாமன்றத்தார் என்னென்ன முறைகளைக் கையாள்வர் என்பதை அவர்களுடன் நெருங்கிப்பழகி அறிந்துகொண்டவன்; எனவே, எந்த முறைகளில் மாமன்றத்தாரின் போக்கைத் தடுக்க முடியும் என்றறிந்து காரியமாற்றினான்.
இந்த இருவரின் துணைகொண்டு, சார்லஸ், மக்களிடமிருந்து பணத்தைக் கசக்கிப் பிழியலானான்,
“மன்னர் உமக்கு ‘வீரர்’ என்று பட்டமளிக்க இசைகிறார்—கட்டணம் நாற்பது பவுன்” என்று ஒரு உத்தரவு.
“எனக்கேன் ஐயனே! வீரன் என்றொரு பட்டம்”
“அரசர் அழைக்கிறார், மறுக்கிறாயே!”
“சொத்து சுகம் உள்ளவர்களுக்கு விருது தேவை—மான்னர் அவர்களுக்கு அளிக்கட்டும்—நான்ஏழை—எனக்கேன் விருது, எங்கிருந்து 40 பவுன் கட்டுவேன்”
“அரசர் அளிக்க விரும்பும் விருதை ஏற்க மறுப்பது, அவரை அவமதிப்பதாகும், இதற்காக உனக்கு அபராதம் விதிக்கிறோம்”
கட்டாயப்படுத்தி ‘விருது’ அளித்துப் பணம் திரட்டும் முறை இதுபோலிருந்தது. 11,5000 பவுன்