உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஹாம்டன்‌, எலியட்‌, ஆகியோருடன்‌ இருந்து, மக்களின்‌ பாதுகாவலராக நடித்தவர்‌, “மன்னன்‌ நம்மிடமிருந்து எதை எதை எல்லாம்‌ பறித்துக்கொண்டார்‌ தெரியுமா? எதைப்‌ பறித்துக்கொண்டாரா? எதை விட்டுவைத்திருக்‌கிறார்‌!” என்று பேசி, மக்களின்‌ பாராட்டுதலைப்‌ பெற்றவர்‌ எனினும்‌, வென்ட்‌ஓர்த்‌, வீரனாகவே இருந்து வந்தார்‌—மன்னர்‌ செவியில்‌ தன்‌ குரல்‌ விழவேண்டும்‌, மன்னன்‌ பார்வை தன்மீது விழவேண்டும்‌, என்ற உள்‌ நோக்கத்‌துடனேயே முழக்கமிட்டுவந்தார்‌.

யாரார்‌ மக்கள்‌ உரிமைக்காக மாமன்றத்திலே தீவிரமாகப்‌ பேசுகிறார்களோ அவர்களைப்‌ பிடித்திழுத்து, பதவி கொடுத்து, வாயை அடைத்துவிடவேண்டும்‌ என்ற எண்ணத்துடன்‌, சார்லஸ்‌, எலும்புத்‌ துண்டுகளை வீசியபோது, அதிலொன்றைக்‌ கவ்விக்கொண்டு, மன்னனுடைய வேட்டை நாய்‌ ஆகிவிட்டான்‌ வென்ட்ஒர்த்‌! மக்கள்‌ துரோகி வென்ட்ஒர்த்‌ தீப்பொறி பறக்கப்‌ பேசினான்‌, உரிமைக்காக—பதவி பெற்றதும்‌ தீயென மக்களைச்‌ சுடலானான்‌! வேக வேகமாகப்‌ பதவி உயர்ந்தது, தக்க திறன்படைத்தவன்‌ கிடைத்தான்‌ என்று அறிந்த மன்னன்‌, நிர்வாகப்‌ பொறுப்பை வென்ட்‌ஒர்த்திடம்‌ ஒப்படைத்தான்‌—ஒரு குறிக்கோள்‌ மட்டும்‌ அவனிடம்‌ கூறிவைத்தான்‌, அரசன்‌ ஆணைக்கு ஈடு எதிர்ப்பு இருத்தலாகாது என்பதுதான்‌ குறிக்கோள்‌. வென்ட்‌ஒர்த்‌, மாமன்றத்தையும்‌ மக்களையும்‌ ஒதுக்கிவிட்டு மன்னன்‌ ஆட்சி செய்ய, என்னென்ன முறைகளை வகுக்கலாமோ அவ்வளவும்‌ செய்து தந்தான்‌. ஸ்டராபோர்டுபிரபுவானான்‌! மக்கள்‌ துரோகி, மன்னரால்‌ பிரபு ஆக்கப்படத்தானே செய்வான்‌!

வென்ட்ஓர்த்தாக இருந்து ஸ்டராபோர்டு பிரபு ஆனவனும்‌ தேவலாய அலுவலகனாக இருந்து, அரச