________________
88 பேர்களை தூண்டிவிட்டோம் என்று சொல்லப்படுமோ தெரியாது, எங்கள் கழகத்துக்கு ஏற்பட்ட வளர்ச்சி நல்ல வேளையாக பரம குடிக்கு அப்பால் தாண்டவில்லை என்று இப்பொழுது கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளுகிறேன். எனக் இன்றையதினம் நம் முன்னுள்ள பிரச்னை, முதுகுளத்தூரில் நடந்தது நவகாளியா, ஜாலியன்வாலாவா, அல்லது இரண்டுமா என்பதுதான். ஜாலியன் வாலாவில் ஏற்பட்டதுபோல் படு கொலைகள் நடந்திருக்கின்றன. துப்பாக்கிப் பிரயோகங்கள் நடை பெற்றிருக்கின்றன. பல குற்றங்களுக்காக தண்டிப்பதாக கூறிக் கொண்டு பல்வேறு மக்கள் சிறைசாலையில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள். இந்த வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு படைத்த முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் குமோ அல்லது எங்கள் கழகத்துக்குமோ அன்போ,தொடர்போ, பற்றோ. பாசமோ இல்லை என்பதனை இந்த நேரத்திலே கூறிக் கொள்ளுகிறேன். ஒருக்கால் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவர் காங்கிரஸுடன் ஒன்றிப்போகமுடியுமே தவிர, எங்களோடு ஈடு பட்டு ஒன்றிப்போய்விட முடியாது என்பது அரசியல் வட்டாரத் தில் நன்றாகத் தெரியும். தடுப்புக்காவல் சட்டத்தைப்பற்றி நாங்கள் ஏதாவது பேசினால், அதிலே சம்பந்தப்பட்ட ஆட்களை மறந்து பிரச்னையைப் பற்றி அணுகுகின்றோம். தடுப்புக்காவல் சட்டத்தை ஆட்சியாளர்கள் மிசமிக தாராளமாக பயன்படுத்துகிறார்கள், அன்று துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபடுகின்ற நேரத்திலே என்ன காரணங்கள் காட்டினார்களோ, அதே காரணங்களை இப்பொழுது காட்டுகிறார்கள். முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் 20 ஆண்டு காலமாக பலாத்காரத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்மீது வழக்குத் தொடருவதை நியாய உள்ளம் படைத்த யாரும் மறுக்கமாட் டார்கள். கோவிந்தசுவாமி அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றது கண்டு வெற்றி பெறாத காங்கிரஸ்காரர்களின் தூண்டுதலின்பேரில் கொள்ளை, கொலை நடந்தன என்று சர்க்கார் அவர்பேரில் வழக்குத் தொடர்ந்தார்கள். 11 ஆண்டு காலம் வழக்கும் நடந்தது. கோவிந்தசுவாமி அவர்கள் பேரில் கொள்ளைக் குற்றம்சாட்டி வழக்குத் தொடர தயாராக இருந்தவர்கள் யாரைத்தான் கொலை பாதகர்கள் என்று சொல்லமாட்டார்கள்? உண்மையான கொலை பாதகர்களை கண்டுபிடிக்க எங்களுடைய துணையை நாடியிருப்