உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பிடி

யாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்; சாளுக்கியம். செல்லப் புறப்பட்டான்—அவன் மனதிலே, சொல்லொணாக் களிப்பு—ஓட்டம் பெரு நடையாக, குதிரைக் கொட்டில் சென்றான்—அழகியதோர் கருங் குதிரையைத் தேர்ந்தெடுத்தான்—வெற்றிவீரன்போல் அதன் மீது அமர்ந்தான். குதிரை கெம்பீரமாக நடந்தது—சாளுக்கியன், காஞ்சிபுரத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்தான், வெற்றிக் களிப்புடன்—பிறகு ஊரைவிட்டுக் கிளம்பினான். குதிரை வேகமாக ஓடலாயிற்று; அதைவிட வேகமாக, அவன் மனதிலே எண்ணங்கள் கிளம்பிக் கூத்தாடின. மகேந்திரனைப் பணியச் செய்தபோது புலிகேசி பெற்ற பூரிப்பைவிட அதிகக் களிப்பு வில்லாளனுக்கு. தனி ஆள்! படை இல்லை! ஆனால் வெற்றி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தான்.

வென்றேன்! வென்றேன்! கொன்றேன்! கொன்றேன் சாளுக்கியத்தை வென்ற வீரனை! வாளிழந்து, போர் ஆற்றலொழிந்து போனான்.

மன்னா! புலிகேசி! எந்த வாதாபியைக் கொளுத்திச் சாம்பலாக்கினரோ, அந்த வாதாபியிலிருந்து படை அல்லக் கிளம்பினது, நான் ஒருவனே கிளம்பினேன்; வென்றேன், பழி தீர்த்துக் கொண்டேன். வாதாபியைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கினர்! அதை நான் கண்டேன் கண்ணெனும் புண் கொண்டு! அந்தச் சாம்பலில் ஒரு பிடி! அதே ஒரு பிடிச் சாம்பல்தான்; சாளுக்கியத்திலிருந்து நான் கொண்டுவந்த, ஆயுதம்! ஆம்! பிடி சாம்பல்!

முடிவில் ஓர் பிடி சாம்பல்! அதனையே உபயோகித்தேன்; பெற்றேன் பெரும் வெற்றி! பிடி சாம்பலால், முடியுடைய மன்னரையும் மிஞ்சிய புகழ் படைத்து, இடியெனப் போர் முழக்கமிட்டு, வெற்றிக்கொடி பிடித்து உலவிய வீராதி வீரன், வாதாபியைத் தீயிட்ட தீரன், புலிகேசியைப் போரிலே வீழ்த்திய சூரன், பல்லவ சாம்ராஜ்யத்தின் வீரச் சின்னமாக விளங்கிய படைத் தலைவன் பரஞ்ஜோதியைப் படுகளத்தில் அல்ல—பாய்ந்து தாக்கி அல்ல—கூர்வாள்கொண்டு அல்ல—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/44&oldid=1766537" இலிருந்து மீள்விக்கப்பட்டது